சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்வு

சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்வு

புதுடெல்லி: ​

கொள்கை சீர்​திருத்​தம், தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்​படு​தல், அன்​னிய நேரடி முதலீட்டை தாராளமய​மாக்​கியது ஆகிய​வற்​றால் நாட்​டின் ராணுவ தளவாட உற்​பத்தி ரூ.1.5 லட்​சம் கோடியை எட்டி சாதனை படைத்​துள்​ளது.


நாட்​டின் ராணுவ தளவாட உற்​பத்தி 2024-25-ம் ஆண்​டில் ரூ.1,50,590 கோடி​யாக உயர்ந்து புதிய சாதனை படைத்​துள்​ளது. இது இதற்கு முந்​தைய ஆண்​டின் உற்​பத்​தியை விட 18 சதவீதம் உயர்​வு. கடந்த 2019-20-ம் ஆண்டு உற்​பத்​தி​யுடன் ஒப்​பிடு​கை​யில் 90 சதவீதம் உயர்​வு.


இந்த சாதனை குறித்து பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறிய​தாவது: ராணுவத் தளவாட உற்​பத்தி ரூ.1.5 லட்​சம் கோடியை எட்​டியதற்கு ராணுவத் தளவாட துறை மற்​றும் தொழிற் துறை​யினரின் பங்​களிப்பே காரணம். இந்த வளர்ச்​சி, உள்​நாட்டு ராணுவ தளவாட உற்​பத்​தி​யின் பலத்தை காட்​டு​வ​தாக​வும், இறக்​குமதி குறைந்து ராணுவத் தளவாட ஏற்​றும​தியை அதி​கரிக்​கும் அளவுக்கு நாட்டை கொண்டு சென்​றுள்​ளது.


ஒரு நாடு தனது பாது​காப்பு தேவை​யில் தன்​னிறைவு பெற​வில்லை என்​றால், அதன் சுதந்​திரம் முழு​மையடை​யாது. நாம் ஆயுதங்​களை வாங்​கி​னால், நாம் பிற நாடு​களின் தயவில் இருக்க வேண்​டிய நிலை ஏற்​படும். அதனால்​தான், தற்​சார்பை அடைய மத்​திய அரசு நடவடிக்கை எடுத்​தது. தற்​போது ராணுவத் தளவாடத்​துறை விரிவடைந்​துள்​ளது, நாட்​டுக்கு இது​வரை இல்​லாத பலத்தை அளித்​துள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறி​னார்.


அதி​கரிப்பு மிக முக்​கி​யம்: நாட்​டின் ராணுவத் தளவாட உற்​பத்தி அதி​கரிப்பு , பதற்​ற​மான நேரங்​களில் வெளி​நாட்டு நிறு​வனங்​களை சார்ந்​திருப்​பதை குறைக்​கும். மிக முக்​கிய​மான ராணுவத் தளவாடங்​கள் எல்​லாம் விரை​வில் விநி​யோகம் செய்​யப்​படு​வது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. ராணுவத் தளவாட உற்​பத்தி அதி​கரிப்​புக்கு மத்​திய அரசு மேற்​கொண்ட கொள்கை சீர்​திருத்​தம், தனி​யார் துறையை ஒருங்​கிணைத்​தது, அன்​னிய நேரடி முதலீட்டை தாராளமய​மாக்​கியது ஆகிய​வையே காரணம்.


தற்​சார்பு இந்​தியா திட்​டம் கடந்த 2020-ம் ஆண்டு அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இத்​திட்​டத்​தால் ராணுவ தளவாட கொள்​முதல் நடை​முறை​கள் எளி​தாக்​கப்​பட்​டன. முப்​படைகளுக்​கான சேவை​கள் மற்​றும் தொழில்​நுட்​பங்​கள் மேம்​படுத்​தப்​பட்​டன. ராணுவத் தளவாட உற்​பத்​தி​யில் புதுமை கண்​டு​பிடிப்பு திட்​டம் (ஐடெக்​ஸ்) திட்​டம் கடந்த 2021-ம் ஆண்டு கொண்டு ரூ.499 கோடி மதிப்​பில் கொண்​டு​வரப்​பட்​டது.


இத்​திட்​டம், ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள், குறு,சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களக்கு தேவை​யான ஆதரவை அளித்​தது. இதன்​மூலம் ராணுவத் தொழில்​நுட்​பத்​தில் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்​டன. இத்​திட்டம் 300-க்​கும் மேற்​பட்ட புதுமை கண்​டு​பிடிப்​பாளர்​களுக்கு 5 ஆண்​டு​களுக்கு தேவை​யான ஆதரவை அளிக்​கிறது.


38,000-க்​கும் மேற்​பட்ட இறக்​குமதி பொருட்​கள் உள்​நாட்​டில் தயாரிப்​ப​தற்கு அடை​யாளம் காணப்​பட்​டன. இவற்​றில் 14,000-க்​கும் மேற்​பட்ட பொருட்​கள் உள்​நாட்​டில் தற்​போது தயாரிக்​கப்படு​கின்​றன. 5,500-க்​கும் மேற்​பட்ட ராணுவத் தளவாடங்​களை உள்​நாட்​டில் குறிப்​பிட்ட கால வரம்​புக்​குள் தயாரிக்க பட்​டியலிடப்​பட்​டது. இவற்​றில் துப்​பாக்​கி​கள், ரேடார்​கள், இலகு ரக ஹெலி​காப்​டர்​கள் உட்​பட 3,000-க்​கும்​ மேற்​பட்​ட பொருட்​கள்​ உள்​நாட்​டில்​ தயாரிக்​கப்​படுகின்​றன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%