சுருளையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபெருமாள் ஸ்ரீஅம்மன் கோயில் கொடை விழா

சுருளையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபெருமாள் ஸ்ரீஅம்மன் கோயில் கொடை விழா



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் பருத்திப்பாடு பஞ்சாயத்து சுருளை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெருமாள் – ஸ்ரீஅம்மன் கோயில் கொடை விழா, வரும் 07.09.2025 ஞாயிறு இரவு முதல் 10.09.2025 புதன்கிழமை மதியம் வரை நடைபெற உள்ளது.


கோயிலின் பாரம்பரிய சிறப்பினை வெளிப்படுத்தும் இந்த கொடை விழாவில், குறிப்பாக செவ்வாய்க்கிழமை நடைபெறும் நிகழ்ச்சிகள் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு பால்குடம் எடுத்து ஊர்வலம், மதியம் 1.00 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 4.00 மணிக்கு பூ பெட்டி எடுத்து ஊர்வலம், மாலை 6.00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், இரவு சாமகொடை என நிகழ்வுகள் நடைபெறும்.


கடைசி நாளான புதன்கிழமை மதியத்தில் கொடியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவை முன்னிட்டு 48 மணி நேர தொடர்ச்சியான அன்னதானம் நடைபெற உள்ளது.


இந்தக் கொடை விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் சுருளை இந்து நாடார் உறவின்முறை அமைப்பு செய்து வருகின்றது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வருக வருக என வரவேற்கின்றோம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%