
சென்னை, ஆக.6-
சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது என பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
இதுகுறித்து நேற்று அவர் அளித்த பேட்டி-
சென்னை போன்ற மெட்ரோ பகுதிகளில் ஆவின் பால் விற்பனை 30% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மொத்தம் ரூ.25 கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு சுமார் ரூ. 33 கோடிக்கு விற்பனை அதிகரித்துள்ளது. இதேபோல் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பாலகங்களில் வினியோகத்தை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆவின் பாலகங்களில் 200க்கும் மேற்பட்ட பால் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%