
வந்தவாசி, ஆக 06:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மும்முனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் டி.நாதன்வேல் தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், சமூக ஆர்வலர் மனோஜ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, எக்ஸ்னோரா கிளை தலைவர் மலர் சாதிக் பங்கேற்று, மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று மாணவர்களிடம் விளக்கினார். மேலும் பள்ளிக்கு மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் தரம் பிரித்து போடுவதற்கு ஏதுவாக பள்ளிக்கு இரண்டு கலர் டிரம் வழங்கப்பட்டது. மேலும் 100 நாள் கற்றல் சவால் நிகழ்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் பள்ளி ஆசிரியர் ஆர்.செந்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?