சென்னையில் முதன்முதலாக ‘‘பேடல்’’ விளையாட்டு மைதானம்’: எம்.எஸ். தோனி துவக்கி வைத்தார்
Aug 10 2025
15

சென்னை, ஆக. 8–
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான எம்.எஸ். தோனி தனது புதிய பேடல் விளையாட்டு மைதானத்தை ‘7பேடல்’ சென்னையில் இன்று திறந்து வைத்தார்.
பேடல் என்பது ஒரு பிரபலமாகி வரும் டென்னிஸ் போன்ற விளையாட்டு ஆகும். இது டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டுகளின் அம்சங்களைக் கொண்டுள்ளது. பேடல் விளையாட்டுக்கான மைதானம் டென்னிஸ் மைதானத்தை விட சிறியது. மேலும் இது கண்ணாடியால் சூழப்பட்டிருக்கும். இந்த விளையாட்டை விளையாட, பேடல் ராக்கெட் மற்றும் டென்னிஸ் பந்து போன்ற உபகரணங்கள் தேவைப்படும்.
சென்னை முதன்முதலாக பேடல் விளையாட்டு மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான எம்.எஸ். தோனி துவக்கி உள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலை பாலவாக்கம் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய ‘7பேடல்’ மைதானம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் எம்.எஸ்.தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கேக்வாட் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மையத்தை துவக்கி வைத்தனர்.
20,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த மிகப்பெரிய வசதி கொண்ட மையத்தில்: 3 பேடல் கோர்டுகள், 1 பிக்கில்பால் கோர்ட், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், மீட்பு அறை, காபே சோனா வசதி ஆகியவை உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி கூறுகையில், சென்னை எனக்கு எப்போதும் விசேஷமான நகரம். விளையாட்டு தளத்திலும், அதற்கும் வெளியேயும் எனக்கு இந்த நகரம் பலவற்றை வழங்கியுள்ளது. எனவே என் முதல் பேடல் மையத்தை இங்கே துவங்குவது மிகுந்த சந்தோஷமாக உள்ளது. பேடல் மிகவும் சுவாரசியமான மற்றும் ஒட்டுமொத்தமான விளையாட்டு. இது நிபுணர்களுக்கே மட்டும் அல்ல, யாராலும் விளையாடக்கூடியது. விளையாட்டு வீரர்கள், குடும்பங்கள், உடல்நலம் விரும்பிகள் அனைவருக்கும் இது சிறந்த விளையாட்டு மையமாக இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை என்று கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?