தனி​யார் தேயிலை தோட்​டத்​தில் பெண் சிறுத்தை உடல் மீட்பு

தனி​யார் தேயிலை தோட்​டத்​தில் பெண் சிறுத்தை உடல் மீட்பு

குன்னூரில் தனியார் தேயிலைத் தோட்டத்தில் கிடந்த சிறுத்தையின் சடலத்தை ஆய்வு செய்த வனத் துறையினர்.

குன்​னூர்: நீல​கிரி வனக்​கோட்​டம் குந்தா வனச் சரகத்​துக்கு உட்​பட்ட கிளிஞ்​சாடா கிராமத்​தில் உள்ள தனி​யார் தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை இறந்து கிடப்​ப​தாக நேற்று வனத் துறை​யினருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, அங்கு சென்ற வனத் துறை​யினர், சிறுத்​தை​யின் உடலைக் கைப்​பற்​றினர்.


தேசிய புலிகள் பாது​காப்பு ஆணைய வழி​காட்​டு​தல்​படி, நீல​கிரி வனக்​கோட்ட உதவி வனப் பாது​காவலர் தலை​மை​யில், முது​மலை புலிகள் காப்பக உதவி வனக் கால்​நடை மருத்​து​வர் மற்​றும் அதி​கரட்டி உதவி கால்​நடை மருத்​து​வர் ஆகியோர் கொண்ட குழு​வினரின் மேற்​பார்​வை​யில், சிறுத்​தை​யின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்​யப்​பட்​டது. வேறு வன விலங்​கு​களு​டன் ஏற்​பட்ட மோதலால், சிறுத்தை இறந்​திருக்​கலாம் என்று வனத் துறை​யினர் தெரி​வித்​தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%