தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் புரட்டாசி மாதத்தில் ஒருநாள் பெருமாள் கோயில் சுற்றுலா

சென்னை:

தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்​சிக்​கழகம் மூலம் புரட்​டாசி மாசத்​தில் ஒரு​நாள் பெரு​மாள் கோயில்​கள் சுற்​றுலா திட்​டம் செயல்​படுத்​தப்​படு​வ​தாக சுற்​றுலா துறை அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.


இது தொடர்​பாக அமைச்​சர் ராஜேந்​திரன் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஆன்​மிக சுற்​றுலா பயணி​கள் பயன்​பெறும் வகையில் தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்​சிக்​ கழகம் சார்​பில் ஆடி மாதத்​தில் ஒரு​நாள் அம்​மன் கோயில் சுற்​றுலா நடத்​தப்​பட்​டது. இந்த சுற்​றுலா பொது​மக்​கள் மத்​தி​யில் அமோக வரவேற்பு பெற்​றது.


இதைத் ​தொடர்ந்​து, தற்​போது சென்​னை, மதுரை, திருச்​சி, தஞ்​சாவூர் ஆகிய நகரங்​களில் உள்ள பிரசித்தி பெற்ற பெரு​மாள் கோயில்​களை தரிசனம் செய்​யும் வகை​யில் பெரு​மாள் கோயில்​கள் தொகுப்பு சுற்​றுலா திட்​டம் செப்​டம்​பர் 17 முதல் புதன், சனி, ஞாயிறு ஆகிய நாட்​களில் காலை 8.30 மணிமுதல் இரவு 8.30 மணி வரை இயக்​கப்​படும்.


அதன்​படி, சென்​னை​யில் செயல்​படுத்​தப்​படும் ஒரு​நாள் வைணவ கோயில் சுற்​றுலா திட்​டத்​தில் 6 பெரு​மாள் கோயில்​களை​யும் மற்றொரு திட்​டத்​தில் 7 பெரு​மாள் கோயில்​களை​யும் தரிசிக்​கலாம். இதே​போல், மதுரை, திருச்​சி, தஞ்​சாவூர் ஆகிய நகரங்​களி​லும் ஒரு​நாள் வைணவ கோயில் சுற்​றுலா இயக்​கப்​படும்.


மேற்​கண்ட சுற்​றுலாக்​களில் பயணி​களுக்கு மதிய உணவு, அனைத்து கோயில்​களின் பிர​சாதம், சிறப்பு விரைவு தரிசனம் ஆகிய​வற்​றுக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இச்​சுற்​றுலாக்​களுக்கு www.ttdconline.com என்ற இணை​யதளத்​தில் பதிவு செய்​து​கொள்​ளலாம். மேலும் விவரங்​களுக்கு 044- 25333333, 25333444 ஆகிய தொலைபேசி எண்​களில் தொடர்​பு​கொள்​ளலாம். இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%