
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சோகத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அமிர்த வல்லி நாயிகா சமேத ஸ்ரீ யோக நரசிம்மர்
திருக்கோயில் நரசிம்ம மூர்த்திக்கு ஆவணி ஸ்வாதி முன்னிட்டு ஸ்வாதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல மூர்த்திகளுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு புதிய வஸ்திரம், பூ மாலைகள் சாற்றி அலங்காரம் செய்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைனை தொடர்ந்து உலக நன்மைக்காக கூட்டுப் பிராத்தனை மற்றும் அன்னதான வைபவம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?