
திருநெல்வேலி, ஆக.12-
திமுகவில் சேருவோருக்கு இடம் கொடுக்க முடியாமல், செய்வதறியாது திகைத்து நிற்கிறோம் என்று ஆர்.எஸ்.பாரதிகூறினார்.
தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நெல்லையில் அளித்த பேட்டி வருமாறு-
எடப்பாடி பழனிச்சாமி சறுக்கி விழுந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அவர் இனிமேல் மேலெழும்ப முடியாது. அவர் சறுக்கு மரம் ஏறிவிட்டார். இறங்குவது எப்படி என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்.
தி.மு.க கூட்டணி உடைந்து விடும் என 2019-இல் இருந்தே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக வெளியேறி கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக தி.மு.க-விற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது.
தி.மு.க-வின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எடப்பாடி பழனிச்சாமி இந்த சுற்றுப்பயணம் முடித்த உடன், மேலும் சிலர் தி.மு.க-வுக்கு வந்து விடுவார்கள். எங்கள் கட்சிக்கு வருவோருக்கு இடம் கொடுக்க முடியவில்லை. எங்கள் கட்சிக்கு வந்தவரை என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலின் போது எட்டு முறை பிரதமர் வந்தார். நாங்கள் 40-க்கும் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றோம்.
அதேபோல அவர் பத்து முறை தமிழ்நாடு வந்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?