சில நாட்களாக வாசகர் கடிதம் எழுத முடியாத பணி நெருக்கடி.
ஆனாலும் மனதுள்
வார்த்தையில் வடிக்க முடியாத ஏக்கம் பிளஸ் ஆதங்கம்.
வாசகர் கடிதம் பண்ண முடியலியே என்று புளுங்கி தவித்த மனதைப் புரிந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பமாக அதை மாற்றி ஆறுதலோடு பாடமும் உணர்ந்தேன் என்பது வேறு விஷயம்.
குறுகிய காலத்தில் தமிழ் நாடு இ பேப்பர் மனதுள் இத்தகைய இடம் பிடித்தது எப்படி என்ற ஆராய்ச்சி வேறு அவ்வப்போது ஓடிக் கொண்டிருக்கிறது.
இணைய தளத்தில் ஒரு மாபெரும் புரட்சி
நடந்திருக்கிறது என்பதை அலைபேசியில் பேசும் நண்பர்கள் மூலம் உறுதி செய்ய முடிகிறது.
இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா,?
மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு செய்தி பத்திரிகை வாசிப்பு அனுபவம் தான்...
ஆனால் ஏதோ..
சம்திங் ஸ்பெஷல் ஊடாடி ஒளிர்கிறது என்பது தான் உண்மை.
தமிழ் நாடு இ பேப்பர் ஆசிரியர் குழுமத்தின்
நேர்த்தி மிகு ஆற்றல் மிகு உழைப்பின் உன்னதம் தான், லட்சக்கணக்கான வாசகர் பெருமக்களை ஈர்த்து நிலை நிறுத்தி வைத்திருக்கிறது என்பதைச் சொல்லாமல் இருக்க என்னால் முடியவில்லை.
இதில் இன்னொரு விசேஷம் என்ன தெரியுமா?
எங்களுக்குள் இறங்கி இருக்கும் அனுபவத்
தெளிவு இருக்கிறதே
அது எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காதது.
இந்த மாதிரியான
பரவசம் ததும்பும்
விளைவுகளை --
விளைச்சல்களை
சொல்லிக் கொண்டே போகலாம்.
இடம் காணாமல் எடிட்
பண்ணும் சிரமத்தை ஆசிரியர் குழுவினருக்கு அளிக்க விரும்ப வில்லை.
வழக்கம் போல் அனைத்து கவிதை களையும் வரி விடாமல் படித்து ரசித்து மகிழ்ந்து நெகிழ்ந்து
மனம் விரிந்து மதி மயங்கி.... இப்படி கதம்ப உணர்வுகளின்
சங்கமத்தில் சந்தோஷித்தது தனி அனுபவம்.
3-- வது பொருளாதார நாடாக இந்தியா
கர்நாடகாவில் வந்தே பாரத் ரயில்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேச்சு
உண்மை தான்.
எத்தனை எத்தனையோ சோதனைகளைக் கடந்து எதையும் தாங்கும் இதயமாய் இயங்கி இந்தியாவை உலகம் புருவம் உயர்த்தி பார்க்கும் அளவுக்கு முன்னேற்றப் பாதையில் கொண்டு வந்து நிரூபித்து காட்டி
யிருக்கிறார் என்றால்
எவ்வளவு பெரிய மகத்தான பங்களிப்பு!
மனசாட்சி உள்ள யாரும் இதை மறுத்துப் பேச முடியாது என்பது மட்டுமல்ல...
இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு இந்தத் தலைமை மட்டும் இல்லாது போயிருந்தால் நமது தேசத்தின் நிலைமை...
நினைத்துப் பார்க்கவே மனம் பதை பதைக்கிறது. நாட்டு நலனில் உண்மையிலேயே அக்கறை உடையோர் பிரதமர் மோடியின் தலைமைக்கு நன்றி கூறவும் பாராட்டி மகிழவும் தவற விடக் கூடாது!
நீக்கப்பட்ட வாக்காளர் விவரங்களை வெளியிடுவது கட்டாயமல்ல
தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல்.
எதிர்க் கட்சிகள் எதிரிக் கட்சிகளாக செயல் படும் மலிந்த அரசியல்
மக்கிப் போவதாக!
2026 சட்டப் பேரவை தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன் என்கிறார்.
கூடிய சீக்கிரம் புத்திரப்
பகை தீர்ந்து விடும் என்று மறைமுகமாக கட்சியினருக்கு பூஸ்ட் ஊட்டுகிறாரோ?
346 திருக்குறள் விளக்கத்தில் கொஞ்ச நேரம் சொக்கிப் போனேன்.
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன் தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்..
அடடா... எவ்வளவு ஆழமான வாழ்வியல் கருத்துச் சுரங்கம்.
மூன்று தடவை படித்துப் படித்து முத்துக் குளித்தேன்.
மிக்க நன்றி சார்!
நலம் தரும் மருத்துவம் பகுதியில் சர்க்கரை நோயாளிகளை மனதில் கொண்டு பல அற்புதமான டிப்ஸ்களை தகவல்களை தந்து
வாசகர் ஆரோக்கியம் பேணும் தங்களுக்கு ராயல் சல்யூட்!
தொழில் நுட்ப/ அறிவியல் செய்தி
நோய் பரவலை முன் கூட்டியே உணரும் மூளை...அடடா என்னே கண்டுபிடிப்பு...
உடல் நோய்வாய்ப் பட்டவர்களை பார்க்கும் போது நமது மூளை எப்படி உஷார் ஆகிறது
நினைத்தாலே சிலிர்க்கிறதே... நமது படைப்பின் மேன்மையைப் புரிந்து கொண்டு விழிப்புணர்வோடு செயல் பட வேண்டும் என்ற பாடத்தையும் புகட்டுகிறது இந்த செய்தி!
இன்னும் இன்னும் எடுத்துச் சொல்ல எத்தனையோ உண்டு.
வாசகர்கள் நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
தமிழ் நாடு இ பேப்பரின் வெற்றிப் பயணம் மேலும் சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
பி.சிவசங்கரன்
கோவை