திருப்பதி கோவிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகையை நன்கொடையாக வழங்கிய பக்தர்

திருப்பதி கோவிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகையை நன்கொடையாக வழங்கிய பக்தர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் உண்டியல்களில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கத்திலான பொருட்களை செலுத்துவார்கள்.

திருப்பதி,


ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, புத்தாண்டு போன்ற பிற முக்கிய தினங்களில் நடைபெறும் சிறப்பு பூைஜகள் மற்றும் வழிபாடுகளில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள்.


திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கத்திலான பொருட்களை செலுத்துவார்கள். மேலும் பக்தர்கள் கோவிலுக்கு நன்கொடையாக பணம் மற்றும் தங்கத்திலான பொருட்களையும் வழங்குவார்கள். இந்த நிலையில் இன்று பெங்களூரைச் சேர்ந்த கே.எம்.ஸ்ரீனிவாசமூர்த்தி என்ற பக்தர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான தங்க நகையை நன்கொடையாக வழங்கினார். பின்னர் அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%