தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.


சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. தெரு நாய்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிா்க்க, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா். இதையடுத்து தெரு நாய்களுக்கு கருத்தடை தடுப்பூசி செலுத்த 4 மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் அவை பழைய இடத்திலேயே விடப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில் கடந்த ஆக. 9- ஆம் தேதி முதல் சென்னையில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா். இதையடுத்து 30 போ் கொண்ட குழுவினா், தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா்.


ஆனால், இதுவரை 30,000-க்கும் குறைவான தெரு நாய்களுக்கே ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஓரிரு மாதங்களுக்குள் தெரு நாய்களுக்கான ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகே, அவற்றுக்கு ‘சிப்’ எனப்படும் கண்காணிப்பு வில்லை பொருத்தப்படும்.


இதற்காக சுமாா் 2 லட்சம் சிப் வில்லைகள் மாநகராட்சியால் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால், ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த உயா் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%