வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 07.09.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 07.09.25



இன்று ஒரு ஆச்சரிய அனுபவம்...

வாசகர் கடிதத்தில் இதை வெளிப் படுத்த வேண்டுமா... வேண்டாமா என்று கொஞ்ச நேரம் தயக்கம். ஆனால் சொல்லா விட்டால் என் தலை வெடித்திடும் என்றான பிறகு சொல்லாமல் இருக்க முடியுமா என்ன... 


நானும் கோவை வாசக

நண்பர் சிவசங்கரும் 

தமிழ் நாடு இ பேப்பரின் புதிய வெளியீடான அருள் தரும் தெய்வம் இதழுக்கு சர்குலேஷன் வேல்யூவை சக்தி மிக்க தாக்க வேண்டி

எடுத்து வரும் முயற்சிக்கு ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக கூடி வருவது ஆனந்தமான

விஷயம். 


இந்த எங்கள் இருவரின் முயற்சிக்கு 

மனப்பூர்வமான ஆதரவு அளித்து வருபவர்களில் எங்களைப் பொருத்த வரையில் மும்மூர்த்திகளாக மூவர் மிக முக்கியமானவர்கள்.

திருவாளர்கள் பாளை கணபதி, நடேஷ் கன்னா, நெல்லை குரலோன்... எங்களை

சரியாக புரிந்து கொண்டு தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் மீது அளப்பரிய பிரியம் வைத்து தெய்வம் இதழின் வளர்ச்சிக்காக சிரமம் பொருட்படுத்தாது பணி செய்கிறார்கள்.

இவர்கள் மாதிரி இன்னும் பலர் செயல்படலாம். ஆமாம் எங்கள் தொடர்பில் இந்த மூன்று பேர்கள் ஆசிரியர் குழுமத்தின் தொடர்பில் முப்பதோ

ஐம்பதோ ஏன் நூறு பேர்கள் கூட இருக்கலாம்.அது தலைமை ஆசிரியருக்கு மட்டுமே

வெளிச்சம்.


சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

எங்கள் ஆர்வத்தில் எப்போதும் இணைந்து நிற்கும் அந்த மூன்று பேர்களில் இருவரிடம் 

ஞாயிறு விடுமுறையை காரணமாக வைத்து 

ஃபோனில் பேசினேன்.


இதில் தான் நான் முதலில் குறிப்பிட்ட 

ஆச்சரியம் உள்ளடங்கி 

இருக்கிறது.


முதலில் பேசியது பாளை கணபதி சாரிடம்.


என்ன சொன்னார் தெரியுமா?


'நாடு என்ன செய்தது என்று கேட்காதே..

நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள் 

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 

கூறிய புகழ் பெற்ற வாசகத்தை நினைவுப் படுத்தி இதில் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தினை இணைத்தார்.


தமிழ் நாடு இ பேப்பர் நமக்கு என்ன செய்தது என்று கேட்காதே..

தமிழ் நாடு இ பேப்பருக்கு நாம் என்ன செய்தோம் என்று கேள்...


தெய்வம் இதழின் வளர்ச்சிக்கு சிந்திக்கும் சிந்தனை யாளர்களின் கூரிய 

நுட்பத் திறனை எண்ணி எண்ணி வியந்தேன்.


தெய்வம் இதழுக்கு சந்தாதாரர் எண்ணிக்கையை 

அதிகரிக்க செய்ய வேண்டும்... அது சம்பந்தமாக எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பவர்கள்,

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டி

ருக்காமல் புதிதாக 

மந்திரம் போல் வலுவாகக் கூறி விழிப்புணர்வு ஊட்ட வேண்டும் என்று மனப் பூர்வமாக நினைத்ததால் தானே 

கென்னடி வாசகத்தை 

மேற் கோள் காட்ட முடிந்தது....


இந்த ரீதியில் மனம் இயங்கி பரவசத்தில் மிதந்தது..


சிறிது நேரம் கழித்து 

கல்லிடை நடேஷ் கன்னா சாரையும் ஃபோனில் அழைத்துப் பேசினேன். 


இங்கே தான் ஆச்சரிய புதிர் அவிழ்கிறது.


உரையாடும் போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?


" தமிழ் நாடு இ பேப்பர் நமக்கு என்ன செய்தது என்று கேட்க முடியாது.

காரணம்... இ பேப்பர் மூலம் வாசக பெருமக்களும் படைப்பாள பெருமக்களும் ஏகமாய் 

பலன் அனுபவித்து வருகிறோம்...

அப்படி யானால் நாம் என்ன செய்ய வேண்டும்?


தமிழ் நாடு இ பேப்பருக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று அனைத்து வாசக உறவுகளும் தங்களுக்குள் தனித்தனியாக கேட்டாலே போதும்..

புதிய புதிய வாசல்கள் திறக்கும். தெய்வம் இதழை அனைத்து வாசக வகையினரும் இணைந்து தெய்வம் இதழின் சர்குலேஷனை தலைமை ஆசிரியர் விரும்பும் வண்ணம் உயர்த்தி விடலாம்."


இப்படிப் பேசி என்னை ஆச்சரியக் கடலில் மூழ்கடித்தார் கல்லிடை நடேஷ் அவர்கள்.


இரண்டு பேர்களும் ஒரே சமயத்தில் ஒரே கருத்தை ( ஏறக்குறைய)

சொல்லி தெய்வம் இதழுக்கு -- தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தின் வளர்ச்சிக்கு ஆக்கப்

பூர்வமாக கருத்து சொன்னது எவ்வளவு பெரிய ஆச்சர்யம்!


சந்தோஷமாக இருக்கிறது...

தமிழ் நாடு இ பேப்பர் 

எப்பேர்ப்பட்ட வாசக உறவுகளை சம்பாதித்து வைத்திருக்கிறது...

நினைத்தாலே நெஞ்சம் நெகிழ்கிறது அல்லவா?

 

ஆகவே அன்பான வாசக உறவுகளே...

இப்படி ஒவ்வொருவரும் புதிது புதிதாக யோசிப்போம் 

அருள் தரும் தெய்வம் இதழின் எண்ணிக்கையை உயர்த்த எண்ணற்ற புதுப்புது யோசனைகள் பிறக்கும்.


சோர்வில்லாமல் சலிப்பில்லாமல் அவற்றை நடைமுறைப் படுத்தும் 

காரிய சித்தியில் கணம் தாமதிக்காமல் 

ஈடுபடுவோம்!


நடேஷ் கன்னா சார் அடிக்கடி சொல்வது போல்... ஆளுக்கு ஐந்து பேரை இணைத்து விட்டால் 

ஆட்டம் குளோஸ்....

அவ்வளவு தான் நண்பர்களே...

மீண்டும் அன்புடன் வேண்டுகிறேன்...

நாள் குறித்து அட்டவணை போட்டு 

விரைந்து காரியத்தில் இறங்குவோம்!

தெய்வம் இதழின் சர்குலேஷனை லட்சத்தை தாண்ட வைத்திடுவோம்!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%