பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப் பறிப்பு மசோதாவுக்கு சசி தரூர் ஆதரவு

பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவிப் பறிப்பு மசோதாவுக்கு சசி தரூர் ஆதரவு

புதுடெல்லி:

பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வரும், முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான சசி தரூர் ஆதரவு தெரி​வித்​துள்​ளார். பிரதமர், முதல்​வர், அமைச்​சர்​கள் பதவிப்​பறிப்பு குறித்த மசோதா நேற்று மக்களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோதா தொடர்​பாக காங்​கிரஸ் பொதுச் செயலரும், எம்​.பி.​யு​மான பிரி​யங்கா காந்தி, கொடூர​மான மசோதா என்று விமர்​சித்​துள்​ளார். ஆனால் மசோ​தாவுக்கு காங்​கிரஸ் மூத்த தலை​வர்​ சசி தரூர் ஆதரவு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்​து, அவர் மேலும் கூறும்​போது, ‘‘நீங்​கள் 30 நாள்​கள் சிறை​யில் வைக்​கப்​பட்​டால், அமைச்​ச​ராக தொடர முடி​யு​மா? இது பொது அறிவு சார்ந்த ஒன்​று. இதில் தவறு இருப்​ப​தாக எது​வும் எனக்​குத் தெரிய​வில்​லை. இந்த மசோ​தாவை நாடாளு​மன்​றக் குழு ஆய்​வுக்கு அனுப்​புவது நல்ல விஷ​யம்​தான். குழு​வுக்​குள் விவாதம் நடத்​து​வது​தான் ஜனநாயகத்​துக்கு நல்​லது. ஆகை​யால், விவாதத்தை நடத்​து​வோம்’’ என்​றார்.


திரு​வனந்​த​புரம் மக்​கள​வைத் தொகுதி காங்​கிரஸ் எம்​.பி.​யான சசி தரூர், அவ்​வப்​போது காங்​கிரஸ் கட்சி மற்​றும் கட்​சி​யின் மூத்த தலை​வர்​களின் நிலைப்​பாட்​டுக்கு மாறாக அண்​மை​யில் கருத்​துகளை தெரி​வித்து வரு​கிறார். இதுகுறித்து அவரிடம் நிருபர்​கள் `நீங்​கள் காங்​கிரஸிலிருந்து விலகி பாஜக​வில் இணை​யப் போகிறீர்​களா?’ என்ற கேள்வி எழுப்​பப்​பட்ட போதி​லும், அதனை அவர்​ முற்​றி​லு​மாக மறுத்​து வரு​கிறார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%