பீகார்: மூன்றாவது நாள் 'வாக்காளர் உரிமை' யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி
Aug 20 2025
12

நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகாரில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொண்டது.
அதன்படி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதனிடையே, பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்தி வருகிறார்.
நேற்று பீகாரின் கயாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காந்தி, "தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பீகார் மாநிலம் கயாவில் மூன்றாவது நாள் 'வாக்காளர் உரிமை' யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். ஜீப்பில் சென்ற ராகுல் காந்திக்கு இருபுறமும் நின்ற பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?