புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்

புச்சிபாபு கிரிக்கெட் தொடர்: இறுதிப் போட்டிக்கு டிஎன்சிஏ முன்னேற்றம்

சென்னை:

புச்​சி​பாபு கிரிக்​கெட் தொடரின் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஜம்மு & காஷ்மீர் அணி​கள் இடையி​லான அரை இறுதி ஆட்​டம் சென்​னை​யில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்​தில் நடை​பெற்று வந்​தது.


இதில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் முதல் இன்​னிங்​ஸில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 567 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. இதையடுத்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 65 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்​தது.


நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 74 ஓவர்​களில் 230 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக யாவர் ஹசன் 84 ரன்​கள் சேர்த்​தார். டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் சார்​பில் வித்​யுத் 7 விக்​கெட்​களை​யும், ஹெம்​சுதேஷன் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். முதல் இன்​னிங்​ஸில் 337 ரன்​கள் முன்​னிலை பெற்ற டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. ஆட்ட நாயக​னாக வித்​யுத் தேர்​வா​னார்.


குரு​நானக் கல்​லூரி​யில் நடை​பெற்ற மற்​றொரு அரை இறுதி ஆட்​டத்​தில் ஹரி​யானா - ஹைத​ரா​பாத் அணி​கள் மோதின. இதில் ஹைத​ரா​பாத் அணி 90 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. 272 ரன்​கள் இலக்கை துரத்​திய ஹரி​யானா அணி நேற்​றைய கடைசி நாள் ஆட்​டத்​தில் 62.4 ஓவர்​களில் 181 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஹரி​யானா அணி சார்​பில் நித்​தின் சாய் யாதவ் 7 விக்​கெட்​கள் வீழ்த்​தி​னார். வரும் 6-ம் தேதி நடை​பெறும் இறு​திப் போட்​டி​யில் டிஎன்​சிஏ பிரெஸிடெண்ட் லெவன் - ஹைத​ரா​பாத் அணி​கள்​ மோதுகின்​றன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%