புரையோடிப்போன ஊழலை எதிர்த்து இந்தோனேசியாவில் மாணவர்கள் போராட்டம்
Aug 29 2025
14

ஜகார்த்தா, ஆக.27-
இந்தோனேசியாவில் ஊழல் புரையோடிப் போயுள்ள நிலையில் அதை எதிர்த்து மாணவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லட்சக்க ணக்கில் மக்களின் வரிப்பணம் செலவு செய்யப் படுகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்திய மதிப்பில் ரூ.5 லட்சத்திற்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி 2024 செப் டம்பர் மாதம் முதல் வீட்டுப் படி என 2.5 லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இவற்றுடன் பய ணப்படி உள்ளிட்ட இதர சலுகைகளும், ஆடம்பரச் சலுகைகளும் உள்ளன. அந்நாட்டில் மொத்தமுள்ள 580 நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இத்த கைய அதிக பணம் சார்ந்த சலுகைகள் மாணவர் கள் மக்களிடையே இருந்த அதிருப்தியை தூண்டி பெரும் போராட்டமாக வெடித்துள்ளது. வீட்டுப் படிக்கு வழங்கப்படும் தொகையானது ஒரு இந்தோனேசிய தொழிலாளிக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை ஊதியத்தின் அளவை விட சுமார் 20 மடங்கு அதிகமாகும். வேலையின்மை, பணவீக்கம் அதிகரித்துள்ளது. மக்களின் அத்தியா வசியச் செலவுகள், வீட்டு வாடகை உள்ளிட்ட பல செலவுகள் உச்சத்தை தொட்டுள்ளன. இந்நிலை யில் அந்நாட்டு அரசு மக்களின் வாழ்வாதாரக் கோ ரிக்கைகளில் கவனம் செலுத்தாமல் உள்ளது. இந்த போக்கு அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்க ளுக்கு செய்யப்படும் அதிகப்படியான செலவுகள் மாணவர்களிடையே கடும் கோபத்தை தூண்டி யது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந் நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவில் ஆயி ரக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் கருப்பு நிற உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போ ராட்டத்தை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவினர். போராட்டக்காரர்கள் “ஒன் பீஸ்” (One Piece) என்ற ஜப்பானின் அனிமே (anime) தொடரில் வரும் கொடியை ஏந்தியபடி போராட்டம் நடத்தினர். இப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் எனவும் அர சாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்கள் செய் துள்ள ஊழல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவான கொ ள்கைகள் ராணுவத்திற்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையிலான திட்டங்களையும் கண்டித்துள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?