மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரை கைது செய்ய அழுத்தம்: முன்னாள் அதிகாரி தகவல்
Aug 02 2025
15

புதுடெல்லி:
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி மேலதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் எனினும், தான் மறுத்துவிட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு முன்னாள் விசாரணை அதிகாரி மெஹபூப் முஜாவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவு எப்படி விசாரித்தது, ஏன் அவ்வாறு விசாரித்தது என்பதை என்னால் சொல்ல முடியாது. ஆனால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், ராம் கல்சங்கரா, சந்தீப் டாங்கே, திலீப் படிதார் போன்றவர்கள் தொடர்பாக எனக்கு சில ரகசிய உத்தரவுகள் வழங்கப்பட்டன. இந்த உத்தரவுகள் அனைத்தும் பின்பற்றத்தக்கவை அல்ல.
மோகன் பாகவத்தை கைது செய்யச் சொல்லி எனக்கு அழுத்தம் தரப்பட்டது. மூத்த அதிகாரிகள் அதற்கான அழுத்தத்தை தந்தனர். அவரைப் போன்ற ஓர் ஆளுமையை கைது செய்வது எனது திறனுக்கு அப்பாற்பட்டது. உத்தரவுகளை நான் பின்பற்றாததால் என் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. இது எனது 40 ஆண்டு கால வாழ்க்கையை நாசமாக்கியது. இந்த வழக்கில் காவி பயங்கரவாதம் என்று எதுவும் இல்லை. எல்லாமே போலியானது” என தெரிவித்துள்ளார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், மெஹபூப் முஜாவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?