மிகவும் மோசமான வெள்ள பாதிப்பு: 9–ந்தேதி பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி

மிகவும் மோசமான வெள்ள பாதிப்பு: 9–ந்தேதி பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி

சண்டிகர், செப்.7–


பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் மோடி வரும் 9ம் தேதி செல்கிறார்.


இது தொடர்பாக பஞ்சாப் மாநில பா.ஜ.க.வின் எக்ஸ் தளப் பக்கத்தில், ”பிரதமர் மோடி 9ம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகை தரவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். பிரதமரின் பஞ்சாப் பயணமானது, பாஜக அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூபிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாப் மாநிலமும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


1,400 கிராமங்களை


வெள்ளம் சூழ்ந்தது


பஞ்சாபில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவையாக மாநில அரசு அறிவித்துள்ளது. 1.48 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 1,400-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள அரசு நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இறங்கி உள்ளது. மாநில அரசுக்கு உதவியாக, ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்களை காக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஏற்கனவே பஞ்சாப் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%