முதல் காலாண்டில் சென்ட்ரல் வங்கியின் நிகர லாபம் ரூ.1,169 கோடி
Aug 11 2025
14

சென்னை, ஆக 9–
இந்திய மத்திய சென்ட்ரல் வங்கி இன்று 144வது நிறுவனர் தினத்தைக் கொண்டாடியது. அதன் தொலைநோக்கு பார்வை கொண்ட நிறுவனர் சர் சோங்ஜீ பெச்கானேவாலா 1911ஆம் ஆண்டு இந்த வங்கியை நிறுவியவர் இவர். இந்தியாவின் முதல் உண்மையான சுதேசி வங்கி - இந்தியர்களால் முழுமையாகச் சொந்தமாக நிர்வகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மண்டலத்தின் பொது மேலாளர் கே. சசிதர், நிறுவனருக்கு புகழ் அஞ்சலி செலுத்தினார். வங்கியின் 114 ஆண்டு கால வளமான பாரம்பரியத்தை எடுத்துரைத்தார்.
4,545 கிளைகள், 4,085 ஏடிஎம்கள் உட்பட 21,000க்கும் மேற்பட்ட தொடர்பு மையங்களைக் கொண்ட வங்கி கிராமப்புற மற்றும் ஓரளவு நகர்ப்புறங்களில் 65% கிளைகளுடன் வலுவான ‘‘பான் இந்தியா’’ இருப்பைப் பராமரிக்கிறது.
சென்ட்ரல் வங்கி 90 கிளைகள் முழுக்க முழுக்கப் பெண்களால் நிர்வகிக்கப் படுகிறது. 2025-26 ஆம் ஆண்டின் முதல் நிதியாண்டில், வங்கி குறிப்பிடத்தக்க நிதி செயல்திறனை அடைந்தது. மொத்த வணிகம் லட்சம் கோடியே 4 ஆயிரத்தை எட்டியுள்ளது. நிகர லாபம் 1.169 கோடி. 31,000 அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுடன் வங்கி செயல்பட்டு வருகிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?