
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் கிழவம்பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரன் மற்றும் அம்மச்சார்அம்மன் கோவிலில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று, பூா்ணாஹுதி முடிவில் 'கடம் புறப்பாடு' நடை பெற்றது. அதன் பின் திருக்கோயில் வளாகத்தில் வலம் வந்து, முனீஸ்வரா் மற்றும் அம்மச்சாா் அம்மன் குதிரை வாகனங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%