
இஞ்சியின் மருத்துவ குணங்களைப்பற்றி நலம் தரும் மருத்துவத்தில் படித்தேன். இப்போது இஞ்சியின் மருத்துவ குணங்களை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். நிறைய டீக்கடைகளில் இஞ்சி டீ தருகிறார்கள். எல்லோரும் இஞ்சியை எப்படியெல்லாம் உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதற்கு இந்த தகவல் நிச்சயம் உதவும்.
ஒரு சின்ன நிகழ்ச்சியை 'ஏனிந்த கோவம் சோகம்?' என்று கதையாக எழுதியிருக்கும் ராஜஸ்ரீ முரளிக்கு பாராட்டுகள். கதையும் ஒரு நல்ல படிப்பினையை போதித்தது.
வி.கே. லக்ஷ்மிநாராயணனின் 'மூன்றாவது வரன்!' என்ற சிறுகதை மிகவும் உயர்வாக இருந்தது. இப்படிப்பட்ட விஷயம் அறிந்த பக்குவமான மனிதர்களும் இருக்கிறார்களேயென்று மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சுந்தரி விரைவிலேயே குணமடைய விரும்புவதுடன், மைதிலிக்கும் எனது திருமண வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கவிஞர் இரா. இரவியின் 'அப்பாவின் நாற்காலி' என்ற கவிதை ஒரு மலரும் நினைவுகளின் அழகோடு, அப்பாவின் சிறப்பையும் பெருமையையும் உணர்த்தும் வண்ணம் ஒரு இலக்கிய அழகோடு இருந்தது.
கொத்தவரங்காய் மற்றும் அவரைக்காயின் மருத்துவப் பயன்களைப் படித்தேன். இங்கே அமெரிக்காவில் பியோரியா என்ற ஊரில் எனது மகள் வீட்டுக்கொல்லையில் அவரை விதையைப்போட்டு, பந்தலும் அமைத்திருந்தோம். அவரை நன்றாக வளர்ந்து படர்ந்து பூக்களும் பூத்துவிட்டது. அது காய்ப்பதற்குள் நான் இந்தியா வந்துவிடுவேன். அதனாலென்ன, கொத்தவரங்காய், அவரைக்காயையெல்லாம் சென்னையில் கடையிலேயே வாங்கி சமைத்து சாப்பிட வேண்டியதுதான்!
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?