
தமிழ்ச் செம்மல் நன்னிலம் இளங்கோவனின் 'கை மாறிய கடிதம்' சிறுகதையில் பிரபாகரனுக்கு ரஞ்சிதாவிடமிருந்து இப்படி ஒரு கடிதம் கிடைக்குமென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பாவம், பிரபாகரன்! இனியென்ன, பிரபாகரன் இந்த ரஞ்சிதா இல்லையென்றால் ஒரு மஞ்சுளாயென்று மனதை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான்!
ஜனனி அந்தோணி ராஜின் 'வார்த்தை விளையாட்டு' சிறுகதையில் உஷா செய்தது நல்ல ஐடியாதான்.
ஆயிரம் ரூபாய் என்று ஒரு நூறு, ஒரு ஐநூறு, இரண்டு இருநூறு ரூபாய் நோட்டுகளாக ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக கையால் தொட்டு எண்ணிக்கொடுக்கும்போது கொஞ்சம் மனசு மலைக்கும். அதுவே GPAY போன்றவற்றை புழங்கும்போது 1000 என்று டைப் அடிக்கும்போது அந்தளவுக்கு மனசு மலைத்துப்போகாது. அதனால்தான் ஆன்லைனில் மக்கள் அதிகம் சிந்திக்காமல் செலவழித்து விடுகிறார்கள்!
'முழுமுதற் கடவுள்' என்ற சிவ.முத்து லட்சுமணனின் கட்டுரை விநாயகரைப் பற்றிய முழுமையான தகவல்களை தந்தது. அதனால் இந்த கட்டுரையை மோதகம் போல இனித்தது.
டி.ரங்காச்சாரி வரலாறு படித்தேன். பெருமைக்குரிய அந்தகால மனிதர்களைப் பற்றி படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது சொந்த ஊர் மயிலாடுதுறை என்பதால், இவர் பெயரில் உள்ள அந்த பள்ளிக்கு அருகில்தான் எங்கள் வீடு இருந்ததால், அடிக்கடி அந்த பள்ளி வழியாகதான் நான் வீட்டிற்கு செல்வேன். அந்த நினைவுகளெல்லாம் இன்னும் பசுமையாக இருக்கிறது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுக் கவிதை பகுதிகளில் வெளிவந்த ரங்கநாயகி ராமனின் 'விநாயகர்', வி.நௌஷாத் கானின் 'விநாயகனே விநாயகனே', வைரமணியின் 'எண்ணினால்...', P.கணபதியின் 'நின்னருள் வேண்டினேன்', சசிகலா விஸ்வநாதனின் 'பிள்ளையாரு', நா.பத்மாவதியின் 'விநாயகனே வருவாய்' ஆகிய ஆறு கவிதைகளும் மிகச் சிறப்பாக இருந்தன.
-சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?