வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 24.08.25

வாசகர் கடிதம் (பி.சிவசங்கர்) 24.08.25



நடப்பு தெய்வம் இதழ் வாசித்த பரவசத்தில் இந்த கடிதத்தை தொடங்குகிறேன்.

விநாயக சதுர்த்தியை நினைவுப் படுத்தும் 

நெஞ்சில் என்றென்றும் நிழலாடும் வண்ணத்தில் விநாயகர் படமும் 

விநாயகரின் நான்கு முகங்களும் 51 நாமங்களின் பலன்களும் என்ற அற்புதமான கட்டுரையும் வெளி வந்திருப்பது தெய்வத்தின் மதிப்பையும் உயர்வையும் உறுதி செய்கிறது.

மொத்தத்தில் அனைத்து பக்கங்களும் உண்மையிலேயே அருள் தரும் பக்கங்களாக மிளிர்ந்து ஜொலிக்கின்றன.

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...!

பக்தி இதழ்களில் தெய்வம் இதழ் 

தனித்துவ பெருமையுடன் தழைத்தோங்கி செழித்து வளரும்!

சிறந்த சமுதாயம் இங்கே மலர்வதற்கு காரணமாகவும் விளங்கும் என்பதும் உறுதி...உறுதி!


இ பேப்பர் மேட்டருக்கு வருவோம்.


பதவி பறிப்பு மசோதா 

பெரும் முக்கியத்துவம் 

பெறுகிறது.

யாரும் இனி சிறையில் இருந்து ஆட்சி செய்ய முடியாது.

பிரதமர் பேச்சு.

கூடவே இலாகா இல்லாத அமைச்சராகவும் இனி யாரும் இருக்க முடியாது! எது எப்படியோ 

அரசியலில் நாகரீகம் காப்பாற்றப்பட இந்த சட்ட மசோதா காரணமாக இருக்கும் என்று நிச்சயம் நம்பலாம்!


திமுக வை அகற்றுங்கள் 

தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி 

அமித்ஷா உறுதி!


அமித்ஷா வின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் சரி தான்! ஆனால் பாஜகவும் அதிமுக வும் 

வெற்றிக் கனி ஈட்ட இன்னும் ஏகமா உழைக்க வேணுமே!

அர்ப்பணிப்பு உணர்வோடு அரிய பல திட்டங்களை தீட்டி

செயல் படுத்தாத வரை 

வெற்றி என்பது அவ்வளவு எளிது அல்லவே!


நலம் தரும் மருத்துவம் பகுதியில் வெறும் வயிற்றில் நெய்யில் வறுத்த வெந்தயம் சாப்பிட்டால் அற்புத பலன் கட்டுரை அருமை.

சர்க்கரை நோயாளிகளுக்கு சுவீட்டான நியூஸ்!

ராஜ் ஸ்ரீ முரளியின் தாய்மை சிறுகதை நெஞ்சம் தொட்டது.

ஹரணியின் வாழ்ந்தே தீருவோம் தொடர் அற்புதம்! வாழ்த்துக்கள்!

சில.முத்து லட்சுமணன் 

எழுதிய தீபங்கள் பற்றிய அரிய தகவல்கள் அருமை.

தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் வெளியாகி இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் வரலாறு சூப்பர் சூப்பர்! அவரின் தமிழ்ப் புலமையில் மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்திய அவரின் மேன்மையை நினைந்து நினைந்து 

உள்ளம் பூரித்தேன்.

இன்று வெளியாகி இருந்த கவிதைகள் அனைத்தும் மனதுக்கு 

இதமாகவும் எழுச்சியாகவும் ஜொலித்தன.

பி.கணபதி அவர்கள் எழுதிய பக்தி இணைந்தால் கவிதையை ரசித்து படித்ததோடு என் டைரியில் வரி விடாமல் எழுதியும் வைத்து பத்திரப் படுத்தினேன். கவிஞர் 

நெளஷாத் கானின் 

மறதி கவிதை என்னை மிகவும் மகிழ்வித்தது.

வாழ்வு தரும் ஆரோக்கியம் 

மூல நோய் தீர்க்கும் அற்புத மருத்துவ குறிப்புகள் வேற லெவல் சார்!

சினிமா செய்திகளின் 

அணிவகுப்பு ரசிகப் பெருமக்களுக்கு சரியான விருந்து என்று தான் சொல்ல வேண்டும்.

செய்திகள், தகவல்கள்,

வாழ்வியல் அனுபவங்கள் என்று அள்ள அள்ளக் குறையாத வண்ணம் 

வாரி வழங்கி வாசக உறவுகளை வள்ளல் பண்புடன் வளப்படுத்தி வரும் தங்களுக்கு என்றென்றும் நன்றி.

வாழ்க வளமுடன்!



பி.சிவசங்கர்

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%