ஞாயிறு அன்று தமிழ் நாடு இ பேப்பர் எனக்கு சரியான வேட்டை என்று சொன்னால் மிகையாகாது.
இ பேப்பர் எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு,
நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து வாங்கி கொண்டிருந்த நாளிதழை நிறுத்திக் கொண்டோம். இதனால் எங்கள் குடும்ப பட்ஜெட்டில் இப்போது ரூபாய் 250
மிச்சம் மட்டுமல்ல...
ஏகப்பட்ட நன்மைகள்.
அச்சு நாளிதழை ஒரே நேரத்தில் ஒருவர் தான் படிக்க முடியும்.
இ பேப்பர் அப்படி அல்ல.. குடும்ப உறுப்பினர் அனைவரின் செல்போனிலும் தவறாமல் ஆஜர் ஆகி விடுவதால் அவரவர் இஷ்டத்துக்கு ஹாய்யாக வாசித்து விடுகிறோம்.
பணம் கொடுத்து பேப்பர் வாங்கும் போது பேப்பர் பையனோட டார்ச்சர் இருக்கிறதே...
சைக்கிளில் பெடல் மிதித்தவாறே பேப்பரை வீசி விட்டு இல்லை எறிந்து விட்டு போவான்.( இந்த விஷயத்தில் அவனைத் தனிப்பட்ட முறையில் குறி வைத்து புகார் வாசிக்க கூடாது... காரணம் அவன் அவசரம் அவனுக்கு)
கிரிக்கெட் பெளலர் பந்தாவில் பேப்பரை வீசும் போது சில நேரங்களில் எங்கள் மீதே பட்டிருக்கிறது.
ஒரு தடவை என் மனைவியின் கண் மேல் பட்டு இரண்டு நாட்கள் அவதிப்பட்டது
எல்லாம் உண்டு.
நாளிதழின் மாதச் சந்தாவை வாங்கும் போதும் பேப்பர் காரத் தம்பியால் சின்னச் சின்ன மனஸ்தாப வருத்தங்களும் வரும்.
இன்னும் சொல்லவா?
குடும்ப சகிதம் வெளியூருக்கு அல்லது டூருக்கு போகும் போது
பேப்பர் வேண்டாம் என்றாலும் எங்கள் ஏஜெண்ட் சட்ட விதி பிரேக் அப் பை அனுமதிக்காது என்று
கறாராக மறுத்து விடுவான்.
தலையாட்டுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழி கிடையாது.
பேப்பரை நீயே வைத்துக் கொண்டு திரும்பும் போது மொத்தமாகக் கொண்டு வந்து கொடு என்றாலும் நோ நோ என்று நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுவான்.
பக்கத்து வீட்டுக்கு இதன் மூலம் தொந்தரவு தர மனம் இடம் கொடுக்காது.
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்றைய வாசகர் கடிதம் முழுக்க, இந்த மேட்டராகவே அமைந்து விடும்.
ஆகவே இன்னொரு சந்தர்ப்பத்தில் விலை கொடுத்து நாளிதழ் வாங்குவதால் கிடைக்கும் மீதித் தொல்லைகளை சொல்லுகிறேன்.
அமெரிக்காவில் இருக்கும் சின்னஞ் சிறு கோபு தமிழ் நாடு இ பேப்பரின் இன்ப அனுபவத்தை நச்சென்று சின்னஞ் சிறு கவிதையில் எழுதி அசத்தி விட்டார்!
ஆங்ங்...சொல்ல வந்ததை மறந்து விட்டேனே!
ஞாயிறு என்றால் நல்ல வேட்டை தான்..
ஏன் தெரியுமா?
ஓய்வு நாள் ஆயிற்றே... தமிழ் நாடு இ பேப்பரை முழுக்க முழுக்க படிப்பேன்...
பொழுது எப்படி போனது என்றே தெரியாது....
என்னைப் பொறுத்தவரை சண்டே விருந்து தமிழ் நாடு இ பேப்பர் தான்!
இதை அனுபவித்து உணர்ந்து சொல்கிறேன்.
கூலிங் கிளாஸ் குமாரு
விடியா விடியல் இரண்டு சிறுகதைகளும் சிறப்பு
சார்!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பற்றிய கட்டுரை வெகு ஜோர்! அருமையான தகவல் திரட்டு!
டாக்டர் முத்துலட்சுமி அம்மா தான் அடையாறு கேன்சர் ஆஸ்பத்திரி உருவாக காரணமாக இருந்தார் என்ற செய்தி இதுவரை நான் அறியாதது!
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் இந்தியாவின் நைட்டிங்கேல் சரோஜினி நாயுடு வரலாறு சிறப்போ சிறப்பு! கவிதாயினி க்கு மகாத்மா காந்தி யோடு இருந்த அதி அற்புதமான நட்புறவைப் பற்றி படிக்கும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வைட்டமின் டி நிறைந்த டாப் 10
உணவுகளை பட்டியல் இட்டிருந்தது மிகவும் பயனுள்ளது!
வழக்கம் போல் ஆசிரியர் குழுவினரின் சமத்தும்
அதில் பளிச்சிட்டது.
தமிழ் மண்ணுக்குரிய
உணவு வகைகளை மட்டும் பட்டியலில் கொண்டு வந்திருந்ததை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.
கவிதைப் பக்கங்கள்
வாசகர் கடிதங்கள்
வட்டார செய்திகள்
என்று குறை எதுவும் வைக்காமல் வாசகர் பெருமக்களின் மனதுக்கு இதமாக
வெளியிட்டு வரும்
நேர்த்திக்கும் நேர்மைக்கும் வார்த்தையால் நன்றி
பாராட்ட முடியாது மட்டுமல்ல, கூடாது என்று தான் சொல்ல வேண்டும்!
தொடர்ந்து சாதனைகள் படைத்து வர வேண்டும் என்று
எல்லாம் வல்ல இறைவனை வாசக நட்புகள் அனைவரும் வேண்டுவோம்.
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று உத்வேகம் கொண்டு செயல்படுவோம்.
தமிழ் நாடு இ பேப்பரின் வளர்ச்சிக்கு
என்றென்றும் உறு துணையாக இருந்து
பெருமிதம் கொள்வோம்!
பி.வெங்கடாசலம்
தென்காசி