தமிழ் நாடு இ பேப்பரின் வாசக நட்புகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
இனிய நண்பர் ஏ.கணபதி எனக்கு ரூபாய் நானூறு அனுப்பி வைத்து அருள் தரும் தெய்வம் இதழுக்கு சந்தா அனுப்பி வைத்து உதவுமாறு உரிமையுடனும் உருத்துடனும் சொன்னது மிகவும் மகிழ்ச்சியை எனக்கு அளித்தது. நிமிடம் தாமதிக்காமல் உடனே
கியூ.ஆர்.கோடு மூலம் தெய்வத்துடன் நண்பரை இணைத்து வைத்தேன். கூடவே ஒரு பேராசை எண்ணம் மனதில் எழுந்தது.
இப்படி தினசரி ஒரு நண்பர் கிடைத்தால்...?
ஏன் கிடைக்கக் கூடாது?
தெய்வம் அனுக்ரஹம் இருந்தால் எல்லாம் கிட்டும்.
தெய்வமே! தினசரி ஒரு நண்பரை தெய்வம் இதழுக்கு சந்தாதாரராக இணைத்து வைக்கும்
வாய்ப்பை வழங்கு...
என்று மனமுருகி வேண்டி யிருக்கிறேன்.
நிச்சயம் பலிக்கும் என்று நம்புவோமாக..!
இந்திய நலனில் சமரசமில்லை என்று
தெள்ளத் தெளிவாக உரத்து ஓங்கி சொல்லி யிருக்கும் மோடிஜீக்கு ராயல் சல்யூட்!
திருவாளர் டிரம்ப்பால்
சமீப காலமாக உலகளவில் ஏற்பட்டிருக்கும் பதட்ட நிலை விரைவில் அகல வேண்டும் என்று
எல்லோரும் ஆண்டவனை வேண்டுவோம்!
கருணாநிதி நினைவு நாள்
முதல்வர் தலைமையில் பேரணி
பிறந்த நாள் ஜுன்...
நினைவு நாள் ஜுலை
ஒரு ராஜ தொடர்பு இருப்பதாய் எனக்கு தோன்றுகிறது.
ரஷ்ய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு.
டிரம்ப் நமக்கு கொடுத்த கெடு நாளுக்கு முன் தினம்
ரஷ்ய அதிபரையே போய் சந்தித்தது... சபாஷ்... சரியான நடவடிக்கை!
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்...
இந்தியாவின் பேராண்மைக்கு என்றும் இழுக்கு நேராது!
சத்தியத்துக்கு சோதனை வரலாம்.
சறுக்கல் நிச்சயம் வராது.
வந்தே மாதரம்
ஜெய்ஹிந்த்!
நலம் தரும் மருத்துவம் பகுதியில் டிஷ்யூ பேப்பர் பற்றிய எச்சரிக்கை மிகவும் பயனுள்ள தகவல்கள்!
இந்தப் பகுதியில் வெளியானதைத் தொகுத்து, இதே
நலம் தரும் மருத்துவம்
என்ற தலைப்பில் நூல் வெளியிடலாமே!
ஸ்டாலின் ஆட்சிக்கு 50
மார்க் தான் தரலாம்.
பிரேமலதா விஜயகாந்த்.
ஸ்டாலினை நேரில் சந்தித்து விட்டு வந்த மாத்திரத்தில் மார்க் போட்டு விட்டாரே!
அவசர அவசரமாக திருத்தி யிருப்பாரோ?
ஆனால் ஒன்று மட்டும் உறுதி.
வீட்டில் போய் சந்தித்ததில் சரியான பேரம்தகைய வில்லை
என்று தான் அர்த்தம் ஆகிறது.பிரேமலதாஇப்படி சொன்னது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது தான் முக்கியம்.ஒரு பெரிய வித்தையும் இல்லை.
எல்கேஜி குழந்தையைக் கேட்டாலும் சொல்லித் தரும்.
இரு சிறுகதைகளும்
ஓகே...ஓகே!
காரைக்காவ் அம்மையார் வரலாறு
கனகச்சிதம்
பாராட்டுக்கள்.
டி.வி.எஸ்.மணி எழுதிய நேரத்தை போற்றிடுவோம் நூல் விமர்சனம் அருமை அருமை!
கவிதைகள் தேன் வர்க்கப் பலா...
இன்று ஒன்றையும் மிஸ் பண்ணாமல் படித்து மகிழ்ந்தேன்.
தமிழ் நாடு இ பேப்பரின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா?
வட்டார செய்திகளுக்கு
முன்னுரிமே கொடுக்கும் நேர்த்தி.
கோயில்களில் கருட வாகனம் கட்டுரை ஜோர் ஜோர்!
இன்னும் சொவ்லி மகிழ எத்தனை எத்தனையோ உள்ளன
கங்கிராட்ஸ்...
கங்கிராட்ஸ்...
பி.வெங்கடாசலம்
தென்காசி