அன்புடையீர்
வணக்கம். 8.8.25 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர். காம் முதல் பக்கத்தில் ரஷ்ய அதிபர் புத்தினுடன் அஜித் தோவல் சந்திப்பு என்ற செய்தி ஆர்வமுடன் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமான நாளாக அமைய எனக்கு வெள்ளிக்கிழமையில் உற்சாகம் கொடுத்தது தான் உண்மை.
அருமையான திருக்குறளை அதன் பொருளுடன் படித்து மகிழ்ந்தேன். 43-வது ஆண்டு ஆடித் தவசி திருவிழா என்ற செய்தியை கோவில்பட்டிக்கே என்னை அழைத்து சென்று விட்டது. அருமையான படமும் செய்து மனதுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் வந்த சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் டிஷ்யூ என்ற செய்தி நல்ல விழிப்புணர் கொடுத்தது. மனமார்ந்த பாராட்டுக்கள். எதை அடக்கினாலும் சிறுநீரை அடக்காதீங்க என்ற செய்தி மிகவும் நல்ல தகவல் பாராட்டுக்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான. 17 - பேர் மீதான குண்டர் சட்டம் என்ற ஹைகோர்ட் உத்தரவை படித்து அதிர்ச்சியாக இருந்தது.
பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் கட்ட வீட்டு கல் அமைக்க தனி விதிமுறைகளை விதித்தது மிகவும் நல்ல அருமையான யோசனை மனம் நிறைந்த பாராட்டுக்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் வீட்டுமனை உள்ள ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டி தரப்படும் என்ற செய்தி தேர்தல் வரப் போவதை சொல்வது போல் இருந்தது.
தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் ஷாம் ஜி கிருஷ்ண வர்மா வரலாறு படத்துடன் படிக்கும் போது அருமையாக இருந்தது. அவருடைய தபால் தலையை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
பல்சுவை களஞ்சியம் பக்கத்தில் வந்த. மீம்ஸ் மற்றும் ஜோக்ஸ் அற்புதம். தெய்வீக அருள் தரும் ஆன்மீகம் பக்கத்தில் வந்த வரலட்சுமி விரதம் பற்றிய அருமை பெருமைகள் படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது நல்ல தகவல் பாராட்டுக்கள்.
60 வயது முடிந்த மூத்த குடிமகன்களுக்கு ஆறுபடை ஆன்மீக இலவச பயணம் என்ற செய்தி இனிப்பான செய்தி இதனால் பலர் அறுபடை வீடுகளை கண்டு வாய்ப்பு கிடைப்பது உண்மை. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது.
சுற்றுலா பக்கத்தில் வந்த தர்மபுரி அருகே உள்ள ஒரு குட்டி அமேசான் காடு என்ற செய்தி புதுமையான தகவலாக இருந்ததா இதை கண்டிப்பாக ஒரு முறை சுற்றுலாவாக சென்று பார்க்க வேண்டும் என்று எண்ண வைத்தது. அரசு திட்டத்தில் ஸ்டாலின் அவர்களின் பெயரை பயன்படுத்த தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு கொடுத்தது புதுமையான செய்தியாக இருந்தது பாராட்டுக்கள்.
விளையாட்டுச் செய்திகள் பக்கத்தில் வந்த ஜூலை மாத சிறந்த வீரர் விருது சிப்மன் கில் பெயர் பரிந்துரை என்ற செய்தி பெருமையாக இருந்தது.
கடைசி பக்கத்தில் வந்த ஒரு பத்தி செய்திகள் மிகவும் அருமை. அதை படிக்கும் போது அயல்நாடுகளுக்கே மனம் சென்று அங்கேயே நேரில் பார்ப்பது போல ஒரு உணர்வு வருவது தான் உண்மை .
அனைத்து பக்கங்களையும் அருமையான செய்திகளாக விரும்பி படிக்க வைத்த தமிழ்நாடு இ பேப்பரின் இன்றைய நாளிதழை தயாரித்த ஆசிரியர் குழுமத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
நன்றி
உஷா முத்துராமன்