காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்!

காட்பாடி கழிஞ்சூர் ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலம்!


 வேலூர், ஆக.14-

வேலூர் மாவட்டம், காட்பாடி கழிஞ்சூர் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த ஆலயம் அண்மையில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதையடுத்து கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 12 பேர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தை பாலாலயம் செய்து மீண்டும் புதுப்பித்து இந்த ஆலயத்தை நிர்மாணித்தனர். இந்நிலையில் இந்த ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில மஹா

 சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஆலய வளாகத்தில் யாகம் வளர்த்து ஸ்ரீமஹா கணபதி யாகத்தை தணிகைவேல் ஐயர் தலைமையிலான குழுவினர் மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தனர். இதையடுத்து ஸ்ரீசெல்வ விநாயகருக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் அடங்கிய பொருட்களுடன் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து ஸ்ரீசெல்வ விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%