
சென்னையில் கஞ்சா சாக்லேட் விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சாவுடன் பயணம் செய்த ஆசாமி ஒருவரை பிடித்திருக்கிறார்கள்.
இப்படி தினசரி மாநிலம் முழுவதும் ஆட்களை பிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கி தரும்போது போதைப் பொருள் ஆசாமிகளுக்கு என்றே தனியாக சிறைச்சாலை ஒன்றை கட்ட வேண்டும் போல இருக்கிறது.
தமிழகம் வீழ்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அன்புமணி பேசியிருக்கிறார். அத்துடன் தமிழக அரசு குறை கூறி நிறைய பேசியிருக்கிறார்.
அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பினார்.
அவரது தந்தையின் எண்ணமோ வேறு விதமாக இருந்திருக்கிறது. அதனால்தான் கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது. எனவே அன்புமணி திமுக அரசுக்கு எதிராக பேசுவதில் ஆச்சரியமில்லை.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர்
என்று 89 பேர்களுக்கு ஒரு விழாவில் பணி ஆணையை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.
அரசுப் பணியில் சேர்வது ஒருவரது அறிவையும் திறமையையும் அடிப்படையாகக் கொண்டது. முதலமைச்சரோ அல்லது பிரதமரோ இதில் சம்பந்தப்படுவதற்கு தார்மீக பொறுப்பு இல்லை. அரசு பணிக்கு தேர்வு ஆனால் அவர்களது பணி ஆணையை தபால் மூலம் அனுப்புவது தான் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த வழக்கம்.
ஆனால் இப்பொழுதெல்லாம் எந்த
அரசுப் பணி ஆணையாக இருந்தாலும் சரி பிரதமரோ அல்லது முதல்வரோ ஒரு விழா நடத்தி அதில் வழங்குகின்றனர். இது சரியான நடைமுறை அல்ல என்பதை அனைவரும் உணர்வர்.
" நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவேரி ஆறு செல்லும் இடங்களில் எல்லாம் தடுப்பணைகளை கட்டுவோம் " என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து ஆட்சியாளர்களும் தூர் வாருவதிலேதான் கவனம் செலுத்துகின்றனர்.
தூர் வருவதில் அரசியல்வாதிகள் ஆர்வம் காட்டுவது ஏன் என்று அனைவருக்குமே தெரியும்.
திருச்செந்தூர் கோவிலில்
22 நாட்களில் உண்டியல் காணிக்கையாக 4.07 கோடி வசூல் ஆகி இருக்கிறது.
பக்தர்கள் தரிசனம் செய்வதில் இந்த கோவில் தமிழகத்தின்
திருப்பதி போல ஆகிவிடும் என்று தோன்றுகிறது.
வளர்மதி ஆசைத்தம்பி
தஞ்சாவூர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?