வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 23.08.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 23.08.25


நாட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாபெரும் மாற்றங்கள் செய்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருக்கிறார்.



இதனால் ஜிஎஸ்டிக்கு விதிக்கப்படும் நான்கு விதமான வரி அடுக்குகள்

இரண்டாக குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.


ஏற்கனவே அனைத்து துறைகளிலும் ஜிஎஸ்டி மூலம் வரி விதித்து மக்களை மத்திய அரசு சிரமப்படுத்துகிறது என்ற பேச்சு நாடெங்கும் பேசப்படுகிறது.


இப்போது தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, "மாநிலத்தின் நிதி ஆதாரத்தை பாதுகாக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டும் " என்று கூறுகிறார்.


ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் மாநில அரசுக்கு கிடைத்து வந்த வரித்தொகை குறைய கூடாது என்று மாநில அரசு விரும்புவது இதன் மூலம் புலனாகிறது. 


இஷ்டத்துக்கு ஜிஎஸ்டி வரியை அனைத்து சேவைகளுக்கும் அமல்படுத்தும் போது மத்திய அரசுக்கு பெயர் கெடுகிறது. 


ஆனால் வசூலிக்கப்படும் தொகையில் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் பங்கை தங்கள் பெயர் கெட்டுப் போகாமல் மாநிலங்கள் வாங்கிக் கொள்ளும்.


ஜி எஸ் டி கவுன்சிலில்

மாநில பிரதிநிதிகள் நல்ல பிள்ளைகள் போல் உட்கார்ந்து கொண்டு புதிய வரி விதிப்பால் தங்களது மாநிலத்துக்கு கிடைக்கப் போகும் பங்கை கணக்கு போட்டுக் கொண்டு இருப்பார்கள்.


ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம் என்பதை தேர்தல்கள் முடிந்த பிறகு மீண்டும் பல மடங்கு உயர்த்த சாத்தியமான வரி விகிதத்தை பார்த்து மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.


டெல்லியில் தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடித்து காப்பகங்களில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்ற தனது தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றிக் கொண்டு இருக்கிறது.


" தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க தேவையில்லை " என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.


நாய்களால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணம் வேறுவிதமாக இருக்கிறது,

விலங்கு ஆர்வலர்களின் வீடுகளுக்குள் தலா நான்கு வெறி நாய்களை விட வேண்டும் என்று பொதுமக்கள் கருதுகிறார்கள்.


           

வெ.ஆசைத்தம்பி

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%