ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் 150 பேர் அவதி
Sep 04 2025
19

திருச்சி:
திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 4.40 மணிக்கு ஷார்ஜா நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாரானது. அப்போது விமானத்தை விமானி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
இதை அடுத்து விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
150க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?