15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, ராயப்பேட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமியிடம் பழகி பாலியல் உறவில் இருந்தது தெரியவந்தது. இதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சிறுவன் திருவல்லிக்கேணி பகுதியில் செல்போன் பறித்த வழக்கில் கைதாகி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து அவனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?