Print Date: Wednesday, 01 July 2026, 06:27 AM


News

பிரதமர் மோடி நாளை செஷல்ஸ் நாட்டிற்குச் செல்கிறார்..! - News7 Tamil

Published On: 2026-06-26 21:59:44

News Image

பிரதமர் மோடி நாளை இந்திய பெருங்கடலில் உள்ள செஷல்ஸ் நாட்டிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக செல்கிறார். அந்நாட்டின் 50 ஆண்டு தேசிய தினம் வருகின்ற 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினாராக கலந்து கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இந்தியக் கடற்படையின் 2 கப்பல்கள் பங்கேற்க உள்ளது. இந்தப் பயணத்தின் போது செஷல்ஸ் நாட்டின் அதிபர் பேட்ரிக்கை சந்திக்கும் பிரதமர் மோடி அவருடன் இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி அங்குள்ள இந்திய வம்சா வழியினரை சந்தித்து கலந்துரையாடுகிறார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். “இந்தியாவும் செஷல்ஸும், வரலாறு, கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையேயான பிணைப்புகளில் வேரூன்றிய கூட்டாண்மைப்பை பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் மோடியின் இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான வலுவான மற்றும் நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு! INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அண்ணாமலை வரவேற்பு! “என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்