Print Date: Wednesday, 01 July 2026, 06:28 AM
Published On: 2026-06-26 21:56:44
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும்; கழக வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும், “கழக மகளிர் அணி மாநில நிர்வாகிகள்; மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்கள்; கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழக இணைச் செயலாளர், மாவட்டக் கழக துணைச் செயலாளர்; தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மகளிர் கழக செய்தித் தொடர்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்” சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 1.7.2026 – புதன் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி பங்கேற்று ஆலோசனை வழங்க உள்ளார்கள். இக்கூட்டத்தில் மூத்த தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். ஆகவே, மேற்கண்ட பொறுப்புகளில் பணியாற்றி வரும் மகளிர் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு! INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அண்ணாமலை வரவேற்பு! “என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்