Print Date: Tuesday, 30 June 2026, 09:38 PM


News

இரவு 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - News7 Tamil

Published On: 2026-06-26 23:27:35

News Image

கடலோர ஆந்திரப்பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலுங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கிமீ முதல் 4.5 உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சிவகங்கை, நீலகிரி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை! வெனிசுலா நிலநடுக்கம் – 550க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம்! “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு!