Print Date: Wednesday, 01 July 2026, 08:00 AM


News

சென்னைவாசிகள் கவனத்திற்கு... முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம்

Published On: 2026-06-26 21:26:47

News Image

மெட்ரோ ரெயில் பாதை பணிக்காக எல்.பி சாலையில் பெட்ரோல் பங்க் சிக்னல் சந்திப்பிலிருந்து எல்.பி முதல் எம்.ஜி. சாலை சந்திப்பு வரை முழுவதுமாக மூடப்பட உள்ளதால் 27.06.2026 முதல் பின்வருமாறு ஒரு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன் விபரம்; * திருவான்மியூரிலிருந்து திரு.வி.க பாலம் நோக்கி செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் (All Buses & All Heavy Vehicle only) எல்.பி முதல் எம்.ஜி. சாலை சந்திப்பிலிருந்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு எம்.ஜி. சாலை சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாக எல்.பி சாலையை அடையுமாறு போக்குவரத்து மாற்றப்படுகிறது. * அதேபோல், பெசன்ட் நகரில் இருந்து 7வது அவென்யூ வழியாக வரும் வாகனங்கள் மகாத்மா காந்தி சாலை அடைந்து வலது புறம் திரும்பி சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை இடது புறம் திரும்பி சாஸ்தரி நகர் 1வது அவென்யூ வழியாக எல்.பி சாலை அடையுமாறு போக்குவரத்து மாற்றப்படுகிறது. * எல்.பி சாலையிலிருந்து திருவான்மியூர் நோக்கி வரும் வாகனங்கள் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ சாலை வழியாக சென்று வலதுபுறம் திரும்பி 11வது குறுக்கு சாலையில் சென்று இடதுபுறம் திரும்பி 8வது குறுக்கு சாலை அடைந்து பின்பு வலதுபுறம் திரும்பி 10வது குறுக்கு சாலை வழியாக எம்.ஜி சாலை அடைந்து அவர்களின் இலக்குகளை அடையாலம். * இதுவரையில் சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலையிருந்து மகாத்மா காந்தி சாலை வழியாக எல்.பி சாலை வரையிலும், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ சாலையில் இருந்து சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை வரை ஒரு வழிப்பாதையாக இருந்த சாலை தற்போது இருவழி பாதையாக மாற்றப்படுகிறது. * அதே போல், சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை திரு.வி.க. பாலம் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாகவும் மற்றும் 11வது குறுக்கு சாலை திருவான்மியூர் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. * இந்திரா நகர் 2வது அவென்யூ சாலையில் கனரக வாகனங்கள் தடை செய்யப்படுகின்றன.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.