Print Date: Wednesday, 01 July 2026, 09:00 AM


News

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: அறக்கட்டளை பொதுச் செயலர் சம்பத் ராய் ராஜிநாமா!

Published On: 2026-06-26 20:57:50

News Image

ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், - TNIE அயோத்தி ராமர் கோயிலுக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் முறைகேடு நடத்தப்பட்டதாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோயில் கடந்த 2024 ஜனவரியில் பிரதமர் மோடி தலைமையில் பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோயில் கட்டுவதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும், காணிக்கைகள், நன்கொடைகள் வழங்கப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் பக்தர்கள் வழங்கப்பட்ட நன்கொடை நிதி முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து எப்ஃஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் வேண்டுகோளின்படி உத்தரப் பிரதேச அரசு கடந்த ஜூன் 14 ஆம் தேதி மூன்று உறுப்பினர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த குழு சமர்ப்பித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே தற்பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. பக்தர்களின் நன்கொடை மூலம் பெறப்பட்ட நிதியில் சுமார் ரூ. 7.5 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பவன் பாண்டே குற்றம் சாட்டியிருந்தார். ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்துள்ளனர். அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பாக முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் தார்மீகப் பொறுப்பேற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு தொடர்பான வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.