Print Date: Wednesday, 01 July 2026, 11:55 AM
Published On: 2026-06-26 20:25:53
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (ஜூன் 26) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி மாநிலத்தில் போதைப்பொருள்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் நாட்டில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகள்/காவல் ஆளிநர்களுக்கு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்கள்: இந்த பதக்கம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2026ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா பேரிடர்: 200-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை…! GOLD RATE: தங்கம் விலை சற்றே உயர்வு – இன்றைய நிலவரம் என்ன…? காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு…? வாடகைக்கு பணமில்லை… நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்றேன் – ‘அப்சஷன்’ பட நடிகை இந்தே நவரெட்…!