Print Date: Wednesday, 01 July 2026, 11:56 AM


Life Style

விருச்சிக ராசிகாரர்களுக்கு நல்ல நேரம் பிறக்கப்போகுது - பிற ராசிகளுக்கு பலன்கள் எப்படி?

Published On: 2026-06-26 20:21:53

News Image

மேஷம்: உங்களுக்கு அனைத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் விருப்பங்கள் ஒருதலைப்பட்சமானது என்பதை மறந்துவிடுவீர்கள். உறவுகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், மனதில் சிந்தித்து ஆராய்ந்து, பிரச்சினைகளை தீர்க்கவும். ரிஷபம்: நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இன்று வெற்றி பெறும். நிதி பரிவர்த்தனைகள் திருப்திகரமாகவும், லாபம் கொடுப்பதாகவும் இருக்கும். இன்று முழுவதும் பணி செய்து சோர்வாக இருப்பீர்கள். எனினும் மாலையில் உற்சாகம் பெறுவீர்கள். மிதுனம்: மனதுக்கு பிடித்தவர்களை மகிழ்ச்சியாக வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அவர்களும் அதேபோன்று உங்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். ஆனாலும் உங்களுக்கான நேரத்தை செலவிட வேண்டும். கடகம்: உங்களது வெற்றி மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். மாலையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். சிம்மம்: உங்கள் அலட்சியப்போக்கின் காரணமாக செலவுகள் அதிகரிக்கும். நாளின் பிற்பகுதியில், பணி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றை அலட்சியம் செய்தால், பெரிய பிரச்சனையாக உருவெடுக்கலாம். எனவே உடனடியாக தீர்க்கவும். கன்னி: மனதிற்குப் பிடித்த உறவுகளை தேடும் முயற்சி வெற்றி பெறும். பணியில் மற்றவர்களைவிட சிறந்து விளங்குவீர்கள். உங்களது வெற்றிக்கதைகளை கூறி, பிறரை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். இதனால், அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள். துலாம்: இன்று கடுமையாக உழைப்பீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள், உங்களது செயல்திறனைப் பார்த்து ஆச்சரியமடைவார்கள். இதனால் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். விருச்சிகம்: உங்களது தலைமைப்பண்புக்கான திறமையை நிரூபிக்க இன்று சரியான வாய்ப்பாகும். அனைத்து பிரச்சினைகளையும் சவாலாக எதிர்கொண்டு, அவற்றைத் தீர்த்து வைப்பீர்கள். தனுசு: உங்களது செயல்கள் உங்களது திறமைகளை எடுத்துக்கூற வேண்டும். உங்களது ஆளுமைப்பண்பை மேம்படுத்திக் கொள்ளவும். உங்களது வீட்டை அலங்கரிக்க முயற்சி எடுப்பீர்கள். மகரம்: உடல்நலத்தையும் மனநலத்தையும் கவனித்துக்கொண்டு, கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றவும். உங்கள் நிறுவனத்தின் சார்பாக, நீங்கள் முக்கியமான பரிவர்த்தனை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவீர்கள். கும்பம்: வேலைப்பளுவின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்படலாம். இருந்தாலும், உங்களது கடின உழைப்பிற்கு, விரைவில் சிறந்த பலன் கிடைக்கும். உங்களது போட்டியிடும் திறன் உடன் பணிபுரிபவர்களுக்கு ஊக்கமளிக்கும். மீனம்: கடந்தகால செயல்திறன் குறித்து சிந்தித்து, உங்களை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பீர்கள். நண்பர்கள் உங்களை மாற்ற நினைக்கலாம். உங்கள் திறமை மற்றும் ஆற்றல் காரணமாக, உங்களது முடிவுகளை நீங்களே எடுப்பீர்கள்.