Print Date: Wednesday, 01 July 2026, 12:54 PM


News

ஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?

Published On: 2026-06-26 19:56:57

News Image

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும், தங்கம் விலை சற்று உயர்ந்து விற்பனையாகி வருகிறது, தொடர்ந்து 3 நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,220க்கும் ஒரு சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.1,05,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சா்வதேச போர்ப் பதற்றம், கச்சா எண்ணெய் மீதான முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலையில் அவ்வப்போது ஏற்ற-இறக்கம் காணப்படுகிறது. தொடர்ந்து மூன்று நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், இன்று சற்று உயர்ந்து விற்பனையாகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) அன்று சவரனுக்கு ரூ. 320 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,08,480-க்கும் ஒரு கிராம் ரூ. 13,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. புதன்கிழமை (ஜூன் 24) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கும் கிராமுக்கு ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,350-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் தங்கத்தின் விலை குறைந்தது. 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து 1,05,120 -க்கும், கிராமுக்கும் ரூ. 210 குறைந்து ஒரு கிராம் ரூ 13,140-க்கும் விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5000 அதிகரித்து ரூ. 2.35 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்திருந்தது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.230-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 10,000 குறைந்து ரூ. 2.30 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிட்டத்தக்கது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.