Print Date: Wednesday, 01 July 2026, 02:21 PM


News

ஒரே மண்டபத்தில் பணிபுரிந்த 2 பேர் வெவ்வேறு இடங்களில் நடந்த மோதலில் அடித்துக் கொலைர் இரண்டு நபர்களை கைது செய்து தீவிர விசாரண

Published On: 2026-06-26 19:23:59

News Image

சென்னை: சென்னையில் ஒரே தனியார் மண்டபத்தில் பணிபுரிந்த 2 பேர், இரு வேறு இடங்களில் நடந்த மோதலில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தியாகராய நகர், தியாகராய சாலையில் நேற்று இரவு ஒருவர் மயங்கிய நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் சிலர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவக் குழுவினர், மயங்கி கிடந்த நபரை பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இறந்த நபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர். அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டதில் இறந்தவர் பெயர், சென்னை தி.நகர் கண்ணம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(50) என்பது தெரியவந்தது. அவர், தி.நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தூய்மைப் பணி செய்து வந்ததும், அவர் அதே பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது பாலாஜி என்கிற ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. பின்னர், டாஸ்மாக் கடையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திரனை ஆட்டோ ஓட்டுநர் பாலாஜி கையால் தாக்கியதில், அவர் மயங்கி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் 105BNS என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாலாஜியை(34) கைது செய்தனர். இதேபோல், நேற்று இரவு அந்த தனியார் மண்டபத்தின் பின்புறம் ஒருவர் தலையில் ரத்த காயங்களுடன் கிடப்பதாக மாம்பலம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ரத்தக் காயங்களுடன் இருந்த நபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (46) என்பது, இவர் சென்னையில் தங்கி இருந்து, திருமண மண்டபத்தை தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு ஆட்களை அழைத்து வரும் மேஸ்திரி வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. ரவிக்குமார், அந்த தனியார் மண்டபத்திற்கு வேலைக்கு அழைத்து வந்த மணி என்கிற சொர்ணகுமார் சரியாக வேலை செய்யவில்லை என பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு ரவிக்குமார் கண்டித்தபோது கோபமடைந்த சொர்ணகுமார் கட்டையால் அவரை தாக்கி விட்டு தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையும் படிங்க.. அதிக மிரட்டல்கள் வருகின்றன; போலீஸ் பாதுகாப்பு வேண்டும்: நீதிமன்றத்தை நாடிய சி.வி.சண்முகம்பின்னர், இந்த சம்பவம் குறித்து மாம்பலம் காவல் நிலைய போலீசார், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, நாகர்கோவிலை சேர்ந்த மணி என்கிற சொர்ணகுமாரை(65) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கின் சட்ட பிரிவு கொலை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. ஒரே தனியார் மண்டபத்தில் பணிபுரிந்து வந்த இரண்டு பேர் வெவ்வேறு பிரச்சனையில் ஏற்பட்ட மோதலில் படுகாயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.