Print Date: Wednesday, 01 July 2026, 04:54 PM
Published On: 2026-06-26 18:39:03
காஞ்சிபுரத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசு செயல்படும் என்று கூறி இருக்கின்றனர். அது மிகவும் வரவேற்கத்தக்கது. திமுக ஆட்சியின் போதும் கூட தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதி முறையாக கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கான நிதி நிலுவை எதுவும் இல்லை. அரசு கடன் வாங்குவதில் தவறில்லை என்றும், அந்த கடனை அடிப்படை கட்டமைப்பை உருவாக்க செலவிட வேண்டும். நலத்திட்டங்களுக்கு மட்டுமே கடன் தொகையை செலவிடுவது சரியல்ல. தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதியும் கட்டாயம் கொடுக்கப்படும். தற்போது எந்த நிதி நிலுவையும் இல்லை. அதேபோல் சட்டசபையில் தான் அரசியல் விமர்சனங்கள் வைக்கப்படும். எதிர்க்கட்சியும் பேசட்டும்.ஆளுங்கட்சியும் பேசட்டும்.அதில் எந்த தவறும் இல்லை. கடன் வாங்குவதில் எந்த தவறும் இல்லை. அதாவது கடன் வாங்கி கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். கல்வி, மருத்துவம், தொழில் முதலீடுகளை செய்ய வேண்டும். இப்படியான முதலீடுகள் மூலம் நல்ல தாக்கல் பொருளாதார ரீதியாக ஏற்படும். கடன் வாங்கி என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். கடன் வாங்கி நலத்திட்ட உதவிகளுக்கு மட்டுமே செலவு செய்யக் கூடாது. அதனை பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்கும் போது, நலத்திட்ட உதவிகளை செய்யலாம்” என்றார்.