Print Date: Wednesday, 01 July 2026, 02:02 AM


Entertainment

உலக தமிழ் மாநாடு நடத்துவது குறித்து விரைவில் நல்ல அறிவிப்பு வரும் - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி

Published On: 2026-06-26 23:03:38

News Image

சென்னை தியாகராயநகரில் உள்ள ம.பொ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், அமைச்சர் ராஜ்மோகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- உலக தமிழ் மாநாடு நடத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் உடன் ஆலோசித்து விரைவில் ஒரு நல்ல அறிவிப்பு வரும். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் த.வெ.க.வில் இணைந்தது ஜனநாயக உரிமை தான். அரசு பள்ளியில் சினிமா பாடல் ஒலித்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்போவதாக மேயர் பிரியா கூறி வருகிறார். அவர் குறிப்பிடும் வீடியோ 2022-ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், முன்னாள் முதல்-அமைச்சர் மீதுதான் எடுக்க வேண்டும். தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது. ஆதாரத்தின் அடிப்படையில்தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் சட்ட ரீதியாகவும், துணிச்சலாகவும் எதிர்கொள்ள வேண்டும். எ.வ.வேலு தற்போது நல்ல ஆதாரத்துடன் சிக்கியுள்ளார். அடுத்து ஒவ்வொருவராக வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.