Print Date: Thursday, 02 July 2026, 06:37 AM


Sports

கபடி வீராங்கனைக்கு தொல்லை பயிற்சியாளருக்கு போலீசார் வலை

Published On: 2026-06-26 22:26:42

News Image

சென்னை: பாலியல் தொல்லை கொடுத்ததாக கபடி வீராங்கனை கொடுத்த புகாரில், போக்சோ வழக்கு பதிந்து, பயிற்சியாளரை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, துரைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜு, 29. கண்ணகி நகர் பகுதி சிறுமியருக்கு 10 ஆண்டுகளாக கபடி பயிற்சி அளித்து வருகிறார். கடந்த 2025ல், மேற்காசிய நாடுகளில் ஒன்றான பக்ரைனில் நடந்த ஜூனியர் கபடி போட்டியில், கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை, தங்கப்பதக்கம் பெற்றதன் மூலம் ராஜு பிரபலமானார். இந்நிலையில், பயிற்சியாளர் ராஜு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தாய் இல்லாத 17 வயது கபடி வீராங்கனை, கண்ணகி நகர் மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரில், 'கபடி பயிற்சியின்போது, பயிற்சியாளர் ராஜு தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். 'போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால் தன்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என வற்புறுத்தினார். மூன்று முறை வீட்டிற்கு வந்து பாலியல் வன்முறைக்கு முயன்றார்' என கூறப்பட்டுள்ளது. புகாரின்படி, 'போக்சோ' உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ள கண்ணகி நகர் மகளிர் போலீசார், தலைமறைவான ராஜுவை தேடி வருகின்றனர்.