Print Date: Wednesday, 01 July 2026, 06:26 AM
Published On: 2026-06-26 22:01:44
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கட்ச் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்றுள்ளது. அந்த காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில் லாரி பகுதியில் உள்ள சாலையில் நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் எதிரே வந்த லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக மீட்கப்பட்டு, ராம்கட்ச் சதர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜ்ரப்பா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மரங்மர்ச்சா பகுதியைச் சேர்ந்தவர்கள் என ராம்கர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். “மண்டாடி” படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு! INDvsIRE: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு..! முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அண்ணாமலை வரவேற்பு! “என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும்” – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்