டோக்கன்கள் இல்லாவிட்டாலும் சொர்க்க வாசல் தரிசனம் செய்யலாம்” - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு தகவல்

டோக்கன்கள் இல்லாவிட்டாலும் சொர்க்க வாசல் தரிசனம் செய்யலாம்” - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பிஆர் நாயுடு தகவல்


திருமலை: வை​குண்ட ஏகாதசியை முன்​னிட்டு திருப்​பதி ஏழு​மலை​யான் கோயி​லில் வரும் 30-ம்​தேதி முதல் ஜனவரி மாதம் 10-ம்​தேதி வரை பக்​தர்​களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.


இதில் ஜனவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தரிசன டோக்​கன்​கள் இல்​லா​விட்​டாலும் பக்​தர்​கள் சுவாமியை தரிசனம் செய்​ய​லாம் என நேற்று அறங்​காவலர் குழு தலை​வர் பிஆர் நாயுடு தெரி​வித்​துள்​ளார்.


திரு​மலை​யில் உள்ள பக்​தர்​களின் தங்​கும் விடு​தி​யை(பிஏசி-2) நேற்று காலை தேவஸ்​தான அறங்​காவலர் பிஆர் நாயுடு ஆய்வு செய்​தார். மேலும் அவர் முடி காணிக்கை செலுத்​து​மிடம், லாக்​கர்​கள் வழங்​குமிடம், அன்​னபிர​சாத மையம் போன்​றவற்​றை​யும் ஆய்வு செய்​து, நிறை, குறை​களை பக்​தர்​களிடம் கேட்​டறிந்​தார்.


அப்​போது அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: வைகுண்ட ஏகாதசியை முன்​னிட்டு வரும் 30-ம் தேதி முதல், ஜனவரி மாதம் 8-ம் தேதி வரை திரு​மலை​யில் பக்​தர்​களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக மேற்​கண்ட 10 நாட்​களுக்கு பாது​காப்​பு, அன்​ன​தானம், தரிசனம் போன்​றவற்​றுக்​கும் முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன.


முதல் 3 நாட்​கள், அதாவது 30, 31 மற்​றும் ஜனவரி 1ம் தேதி வரை குலுக்​கல் முறை​யில் பக்​தர்​கள் தரிசன டோக்​கன்​களை பெற்​றனர். ஜனவரி 2-ம் தேதி முதல் எவ்​வித டோக்​கன்​கள் இல்​லா​விட்​டாலும், சாமானிய பக்​தர்​கள் தரிசனம் செய்ய ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த கால அனுபவங்​கள் மூலம் இம்​முறை மிக சிறப்​பான ஏற்​பாடு​களை செய்ய தேவஸ்​தானம் அனைத்து நடவடிக்​கைகளை​யும் மேற்​கொண்டு வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%