திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மார்கழி மாத திருப்பாவை உபன்யாசம் தொடக்கம்...!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மார்கழி மாத திருப்பாவை உபன்யாசம் தொடக்கம்...!



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனைக் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார்கள் திவ்ய பிரபந்த பிரச்சாரத் திட்டம் சார்பில் மார்கழி மாத சிறப்பு உபன்யாசம் தொடங்கப்பட்டது. ஸ்ரீமான் ஆர்.சீனிவாச‌ பெருமாள் ராமானுஜதாசர் பங்கேற்று, ஸ்ரீ ஆண்டாள் இயற்றிய திருப்பாவை பாடலின் கருத்துரைகளை பக்தர்களுக்கு வழங்கினார். மார்கழி மாதம் முழுவதும் இந்த சொற்பொழிவு தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம பஜனை மந்திர கைங்கரிய டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%