தீபாவளி சரக்கு விற்பனை 3 நாளில் ரூ 790கோடி

தீபாவளி சரக்கு விற்பனை 3 நாளில் ரூ 790கோடி


சென்னை,அக்.22-

 தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.790 கோடியை எட்டி உள்ளது.

 கடந்த அக். 18. 19, 20 ஆகிய 3 நாள்களில் மட்டும் ரூ.ரூ.789 கோடியே 85 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது.இதில் வழக்கம் போல மதுரை மண்டலம் ரூ. 170.64 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. சென்னை மண்டலம் ரூ. 158.34 கோடி, திருச்சி 157.31 கோடி,சேலம் 153.34 கோடி, கோவை 150.31கோடி என விற்பனை ஆனது.

கடந்த ஆண்டு தீபாவளி மது விற்பனை ரூ.438 கோடி. இந்த ஆண்டு ரூ.600 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதையும் தாண்டி மது விற்பனை ஆனது. தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுடன் கூடிய 3,240 பார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%