திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் என தமிழக அரசு அறிவிப்பு. 14ஆம் தேதி முதல்
பாமகவில் விருப்ப மனுக்கள் ஏற்கப்படும் என அன்புமணி அறிவிப்பு
விஜய் கட்சி உறுப்பினர்களுக்கு கியூ ஆர் கோடு அட்டை வழங்கப்பட்டது.
பாரம்பரிய மருத்துவ குறிப்புகள் அனைத்தும் நிஜமாகவே அரு மருந்து தான். ரத்தநாளக் கோளாறுகளுக்கு புதிதாக ஹைபிரிட் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு 27 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. நானோ
போட்டு மூலம் இதய நோய்க்கு தீர்வு காணப்பட்டது அப்பல்லோ மருத்துவமனையில். தோப்புக்கரணம் போடுவது உடல் ரீதியாக நல்லது என்ற கட்டுரை மிக அருமை. ஆன்மீக செய்திகள் அனைத்தும் தரமாக இருந்தது . பாட்டி பேரன் அலப்பறைகள் கட்டுரை சிரிப்பை வரவழைத்தது.
ஆரோக்கியம் பற்றிய குறிப்புகள் அனைத்தும் பயன் உள்ளவை.
தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டியது. டெல்லியில் பழைய 500 ரூபாய் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல். எனது கேள்விகளுக்கு அமித்ஷா பதில் தரவில்லை என ராகுல் குற்றச்சாட்டு. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டால் அனைவரும் சமையல் பாத்திரங்களுடன் போராட வேண்டும் என மம்தா அறிவிப்பு. கேரளாவில் போலி மருந்துகள் பிடிபட்டது.
அமெரிக்காவில் கோல்ட் கார்டு திட்டத்தை ட்ரம்பு அறிமுகப்படுத்தினார்
வழக்கம் போல இன்றைய செய்திகள் அனைத்தும் தரமாக இருந்தது.
கவிதைகள் கட்டுரைகள் மருத்துவ குறிப்புகள் ஆன்மீக கட்டுரைகள் சுற்றுலா கட்டுரைகள் என பலவிதமான கட்டுரைகளை தொகுத்து தமிழ்நாடு இ பேப்பர் வழங்கி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாடு இ பேப்பர் குடும்பத்தினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?