tamilnaduepaper
Breaking News
❯ Epaper
Join Whatsapp Channel Join Telegram Channel

பிரம்மசூத்திரம் அடங்கிய சிவன் கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் ஆயிரம் சிவலிங்கங்களை தரிசித்த பலனும், புண்ணியமும் கிடைக்கும் என கோயில் வரலாறு கூறுகிறது.

 

 அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பல அதிசயங்களை கொண்ட இந்த சிவன் கோவில் ஆந்திரபிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ளது.

 

இந்தியாவின் பழமையான சிவன் கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. . ஸ்ரீமுகலிங்கம் கிராமத்தில் உள்ள சோமேஸ்வரசுவாமி கோவிலின் தனித்தன்மையை அறிந்து அங்கு சென்று சிவனை தரிசித்தால் பல கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

பெரும்பாலும் கோயில்கள் அனைத்தும் கிழக்கு திசை நோக்கியே இருக்கும். ஆனால் சோமேஸ்வரசுவாமி கோவில் மட்டும் வித்தியாசமாக மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது. இக்கோயிலின் சோமேஸ்வரசுவாமி ஆலயத்தின் உள்ளே அமைந்திருக்கும் சிவலிங்கத்தின் மீது மாலை நேரத்தில் சூரிய ஒளியும், இரவில் சந்திரனின் கதிர்களும் விழுவதை ஆச்சரியம், அதிசயம் கலந்த ஒன்றாக இங்குவரும் பக்தர்கள் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர் .

 

இவ்வுளவு பெருமை வாய்ந்த ஆந்திர பிரதேச புராணக் கதைகளுக்கு பெயர் பெற்றது என்றே சொல்லலாம். புராணக் காலத்தில் தக்ஷ மகாராஜாவிற்கு 64 மகள்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 27 மகள்களும் தங்களது பெண் குழந்தைகளை சந்திரனிடம் கொடுத்து திருமணம் செய்து கொண்டதாக கோவில் வரலாறு தெரிவிக்கிறது. ஆனால் சந்திரன், தாரா , ரோகிணி என்ற பெயருடைய இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 

இதை அறிந்த தக்ஷாவின் மகள்கள், இனிமேல் சந்திரனோடு சேர்ந்து வாழப்போவதில்லை என தந்தையிடம் முறையிட்டாகதாக தெரிகிறது. இதனால் கோபம் கொண்ட தக்ஷா உடனடியாக சந்திரனை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் சந்திரனோ இதை பற்றி கிஞ்சித்துக்கும் கவலை கொண்டதாக தெரியவில்லை. தன் பேச்சை மதிக்காததால் கோபமுற்ற தக்ஷன், சந்திரனுக்குத் தொழுநோய் வரும்படி சாபமிட்டார். இந்த சாபத்தை போக்க பல புண்ணிய நதிகளில் நீராடினான் சந்திரன்.

 

ஆனால் தொழுநோய் மட்டும் அகலவேயில்லை என கூறப்படுகிறது. நொறுங்கிப்போன சந்திரன், இனியும் தன்னால் தொழுநோயில் இருந்து மீளமுடியாது என்ற எண்ணத்திற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில் தான் வம்சதாரா நதியில் சில நாட்கள் குளித்தால் தொழுநோய் குணமாகும் என்று புராணங்களில் எழுதப்பட்டிருப்பதை அறிந்த சந்திரன், அங்கு சென்று வரலாறு கூறியபடியே செய்தார்.

 

பின்னர் சந்திரன் தனது கரங்களால் மேற்கு நோக்கி இருக்கும் பிரம்மசூத்திரத்துடன் கூடிய சிவலிங்கத்தை அங்கே நிறுவினார். இந்த பிரம்மசூத்திர லிங்கத்தை ஒருமுறை தரிசனம் செய்வது ஆயிரம் சிவலிங்கங்களை தரிசனம் செய்ததற்கான பலனைக் கொடுக்கும் என்பது ஐதீகம். இந்தக் கோயிலுக்கு வருகை தந்து லிங்கத்தை தரிசித்து, சிவனுக்கு அபிஷேகம் செய்தால் நம் உடலில் உள்ள நாள்பட்ட நோய்கள் தீரும் என கோயில் வரலாறு தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஆண்டு முழுவதும் இந்த சோமேஸ்வரசுவாமி கோயிலுக்கு பக்தர்கள்கள் ஆயிரக்கணக்கோனோர் நாள்தோறும் வந்து

செல்கின்றனர்

ராசி பலன்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் உண்டாகும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய... மேலும் படிக்க

பிரிந்து சென்ற உறவினர்கள் வலிய வருவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் திருப்தி உண்டாகும். வியாபார... மேலும் படிக்க

கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவது நல்லது. அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். தள்ளிப்போன சில காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் உற்சாகம் பிறக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் வரவுகள் மேம்படும். கருத்துக்களுக்கு... மேலும் படிக்க

பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கமின்மை ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மின்னணு சாதனங்களில் சிறுசிறு பழுதுகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதளவில் சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தாழ்வு... மேலும் படிக்க

பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்கள் மூலம் உடலில் சோர்வு ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தேவைகளை... மேலும் படிக்க

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின்... மேலும் படிக்க

உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள்... மேலும் படிக்க

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும்.... மேலும் படிக்க

புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன்... மேலும் படிக்க

சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச்... மேலும் படிக்க

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று... மேலும் படிக்க

வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில்  மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில்... மேலும் படிக்க